உத்தரதேவி சேவையை ஆரம்பிக்கவுள்ளதாம்?


இரட்டை வலுகொண்ட ரயில் சேவை கொழும்பு முதல் காங்கேசன்துறைவரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் உத்தரதேவி என்ற பெயரில் இந்த ரயில், சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. குறித்த ரயிலின் பரீட்சார்த்தப் பயணம் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 6 மணிக்கு போக்குவரத்து அமைச்சரின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதையடுத்து, எதிர்வரும் 30ஆம் திகதி முதல் குறித்த ரயில் சேவை, முற்பகல் 10.45மணிக்கு கொழும்பிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.