அமெரிக்க ஜனாதிபதிக்கு வடகொரிய தலைவர் பாராட்டு
அண்மையில் வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வடகொரிய இராஜதந்திரி கிம் யொஹ் சொல்-உடனான சந்திப்பை தொடர்ந்தே கிம் ஜொங் உன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் இடையிலான இரண்டாவது உச்சிமாநாட்டை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியளவில் நடத்துவதற்கும் இருதரப்பும் தீர்மானித்துள்ளன.
இந்நிலையில், ஜானதிபதி ட்ரம்பின் நேர்மறையாக சிந்தனை மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக வடகொரிய தலைவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய அமெரிக்காவுடன் இணைந்து இரு நாடுகளும் அடைந்த இலக்கை நோக்கி முன்னோக்கி நகர்வதற்கு பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக வடகொரிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் பொருளாதார தடைகள் நீடிக்கும் பட்சத்தில் தமது நாட்டின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நேரிடும் என வடகொரிய தலைவர் தனது புதுவருட செய்தியில் கடும் தொணியில் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், இருதரப்பும் தற்போது சமரசமாக தத்தமது கருத்துகளை பரிமாறிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpeg
)

கருத்துகள் இல்லை