சிம்பு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பால் முகவர்கள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது படத்திற்கு கட் அவுட் வைத்து, பாலாபிஷேகம் செய்யுங்கள் என சிம்பு வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பால் முகவர்கள் சங்கம் சார்பில் தலைவர் பொன்னுசாமி காவல் ஆணையர் அலுவலகத்தில் சிம்பு மீது புகார் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பால் முகவர் சங்கத் தலைவர், " கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று சிம்பு பேசி வெளியிட்டுள்ள வீடியோ, ரசிகர்களை உசுப்பேற்றும் விதமாக உள்ளது. மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வெளியாகும் நாளில் பால் முகவர்களின் கடையில் பால் திருடு போகாமல் தடுக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், சர்ச்சையான வீடியோவை பதிவிட்ட சிம்பு மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கருத்துகள் இல்லை