ஸ்ரீ வீரகாளியம்மன் ஆலயத்தில் திருட்டு!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  கொக்குவில் கிராமத்திலுள்ள ஸ்ரீ வீரகாளியம்மன் ஆலயத்திலிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணமும் ஆலயத்திலிருந்து ஒலிபெருக்கியும்  திருடப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விhசரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சம்பவம் நேற்று புதன்கிழமை  இடம்பெற்றுள்ளது.

ஆலய வழிபாட்டுக்குச் சென்ற பக்தர் ஒருவர் அவ்வாலயத்தை நோட்டமிட்டதில் அதன் கூரையோடுகள் கழட்டப்பட்டிருப்பதை அவதானித்து ஆலய நிருவாகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இவ்விடயம் மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் பொலிஸ் அதிகாரிகள் ஆலயத்திற்கு வருகை தந்து நிலைமையைப் பார்வையிட்டனர்.

இதன்போது ஆலயத்திலிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் ஆலயத்தின் பயன்பாட்டுக்காக  ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார ஒலிபெருக்கி சாதனங்களும் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மட்டக்களப்புப் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.