நிலவில் நிகழ்ந்த மூன்றாவது அதிசயம்

2019, ஜன., 21ல் நிகழ்ந்த சந்திர கிரணத்தன்று, நிலவு, பூமிக்கு மிக அருகாமையில் வரும், ‛சூப்பர் மூன்’ நிகழ்வும் அரங்கேறியது. சந்திர கிரகணமும், சூப்பர் மூன் நிகழ்வும் ஒன்றாக நடப்பது மிகவும் அரிது.


இந்நிலையில், அதே நாளில், நிலவில் மூன்றாவது அதிசயமும் நிகழ்ந்தது. அதாவது, சந்திர கிரகணம் நடைெபற்றுக் கொண்டிருந்த போது, நிலா, பூமிக்கு மிக அருகாமையில் வந்து, சூப்பர் மூன் அல்லது ரெட் மூனாக காட்சி அளித்த போது, நிலவின் மீது, விண்கள் ஒன்று மோதியது.

இதை, விண்வெளி ஆய்வாளர்கள் தத்ரூபமாக படம் பிடித்துள்ளனர். இது வீடியோவாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக இது போன்ற வெவ்வேறு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடைபெறுவது மிகவும் அரிதான ஒன்று என, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆய்வாளர்கள் கூறுகையில், ‛‛ஜன., 21ல் நிகழ்ந்த சந்திர கிரகணத்தை, ஐரோப்பா, ஆப்பரிக்க நாடுகளிலும், அமெரிக்காவிலும் காண முடிந்தது.

இந்த கிரகணம் நிகழ்ந்த நாளில், நிலவு, பூமிக்கு மிக அருகாமையில் வந்தது. எனவே, நிலவு மிகவும் சிவப்பு நிறத்துடன் காட்சி அளித்தது. இந்த நிகழ்வை, ரெட் மூன் அல்லது சூப்பர் மூன் என அழைப்பது வழக்கம்.

இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் நடப்பதே அரிது. இந்நிலையில், இந்த நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, திடீரென, நிலவின் மேற்பரப்பில் ஒரு வெளிச்சம் தென்பட்டது. உடனே, நாங்கள் அதை கூர்ந்து கவனித்தோம்.

வீடியோவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போது, நிலவின் மேற்பரப்பில், விண்கல் ஒன்று மோதியது தெரிய வந்தது. இதன் காரணமாகவே, அதில் திடீர் வெளிச்சம் தோன்றியது. பொதுவாக, நிலவில் விண்கல் மோதுவது சாதாரண நிகழ்வே.

ஆனால், மூன்று நிகழ்வுகள் ஒருசேர நடப்பது அரிதிலம் அரிது’’ என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முழுமையான ஆராய்ச்சிக்குப் பின், இந்த நிகழ்வை உறுதி செய்த பின், இப்போது தான், ஆய்வாளர்கள் இந்த தகலை வெளியிட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.