யாழ்.நெடுங்குள காணியை சுவீகாிக்க முயற்சி மக்கள் எதிா்ப்பால் முறியடிப்பு!

யாழ்ப்பாணம்- நெடுங்குளம் பகுதியில் உள்ள 300 பரப்பு தனியார் காணியை சுவீகரிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட காணி அளவிடும் நடவடிக்கை   காணி உரிமையாளார் களின் எதிர்ப்பால் இன்று தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.


யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவின் கீழ் நெடுங்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள சுமார் 300 பரப்பு காணி  பல காலமாக உரிமம் கோரப்படாமலிருந்துள்ளது. குறித்த காணி பிரதேச செயலரால்  அடையாளப்படுத்தப்பட்டு

அந்த இடத்திலே முதற்கட்டமாக புதிய குடியேற்றத் திட்டமொன்று அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் குறித்த காணிகயைச் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

ஆயினும் அந்த 300 பரப்புக் காணியில் தன்னுடைய சுமார் 80 பரப்புக் காணி இருப்பதாக பெண் ஒருவர் யாழ்.அரச அதிபரிடம் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தார். அதனடிப்படையில் அங்குள்ள  காணிகளுக்கு உரிமையாளர்கள்

இருந்தால் அதற்கு நஸ்ட ஈடு வழங்குவதாக அரச அதிபர் தெரிவித்தார். ஆயினும் அந்த 80 பரப்புக் காணியின் உரிமையாளர் தனக்கு நஸ்ட ஈடுகள் எவையும் வேண்டாம் என்றும் தன்னுடைய காணியை தனக்கு வேண்டுமெனக் கேட்டதற்கமைய

அவருடைய காணியை விடுத்து ஏனைய 220 பரப்புக் காணிகளையும் சுவீகரித்து அங்கு புதிய குடியேற்றத் திட்டமொன்று மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டு இன்று நில அளவீடு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த காணியின் ஏனைய உரிமையாளர்கள் அனைவரும் இன்று காலை அப்பகுதியில் ஒன்று கூடி தமது காணியை அளவீடு செய்ய வேண்டாம் என எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனவே நில அளவை மேற்கொள்ள வந்த அதிகாரிகள்  காணி அளப்பதை நிறுத்திவிட்டு, பிரதேச செயலாளருக்கு மகஸர் ஒன்றினைத் தருமாறும் கோரியிருந்தனர். அதனடிப்படையில் காணி உரிமையாளர்கள்

குறித்த சுவீகரிப்புக்கு எதிரப்பு தெரிவித்து கடிதம் ஒன்று எழுதி அதில் கையொப்பம் இட்டு அதிகாரிகளிடம் கையளித்தனர்.

இந்த போராட்டத்தில், யாழ்.மாநகர பிரதி முதல்வர் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் மாநகரசபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colomboNo comments

Powered by Blogger.