மாயாவதி கூட்டணியை மிரட்டவே பிரியங்கா வருகை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்த்துக் கொள்ளாமல் தனியாக கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் அணியை மிரட்டுவதற்காகத்தான் பிரியங்கா வதேரா அரசியலில் களமிறக்கப்பட்டுள்ளார் என்று பா.ஜ.க. விமர்சித்துள்ளது.


பீகார் துணை முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி இதுகுறித்து பேசும்போது, பிரியங்கா வதேராவின் வருகையால் தங்கள் கட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றார். பார்ப்பதற்கு இந்திரா காந்தி போல இருந்தாலும், அவருக்கும், பிரியங்காவுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு என்றும் அவர் கூறினார். அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் தனித்து கூட்டணி வைத்துள்ளதைக் குறிப்பிட்டு பேசிய சுஷில் குமார் மோடி, அவர்களை மிரட்டுவதற்காகத்தான் பிரியங்கா வதேராவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.