விரிசல் அடையும் ராஜபக்ஷ ரெஜிமென்ட்?

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச அண்மையில்  திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

திருமணத்தில் நெருக்கிய உறவினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்து கொண்ட போதிலும், மஹிந்தவின் சகோதரரான பசில் ராஜபக்ச உட்பட அவரது குழுவினர் கலந்து கொள்ளவில்லை.

இந்த விடயம் தொடர்பில் தற்போது அரசியல் மேடைகளில் பேச ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரச்சினை இருந்தாலும் குடும்ப நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்வது வழமையாகும். எனினும் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள தீவிர பதவி மோதலே இந்த நிலைக்கு காரணம் என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட மோதல் தன்மை தற்போது மேலும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோல்வியடைய பசில் தான் காரணம் என மஹிந்தவின் புதல்வர்கள் பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்கள். இதனை மஹிந்த ராஜபக்ஷவும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் அண்மையில் நடந்த ஆட்சி மாற்றத்திலும் பசிலை கண்டுக்கொள்ளாமல் செயற்பட்டமை பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியது.

தற்போது ராஜபக்ச சகோதரர்கள் அனைவரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாரியுள்ளமையினால் ஏற்பட்டுள்ள பிரிவுகளும் திருமணத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இதேவேளை கடந்த மாதங்களில் அரசியல் ரீதியாக கடுமையாக மோதிக்கொண்ட ரணில் - மஹிந்த திருமண வைபவத்தில் நட்பு பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.