மேகாலயா சுரங்க அனர்த்தம்: மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

மேகாலயா சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகள் 45 ஆவது நாளாக இன்று (சனிக்கிழமை) நடைபெற்றபோது மேலும் ஒருவரின் சடலத்தை மீட்பு குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.

அந்தவகையில கடந்த ஜனவரி 17ஆம் திகதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற எலக்ட்ரானிக் கண்களும் ரோபோடிக் கைகளும் கொண்ட இயந்திரம் இச்சடலத்தை கண்டெடுத்துள்ளது.

இந்நிலையில் ஏனையவர்களின் சடலத்தையும் மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் கூட்டு மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது, இறந்தவர் யாரென்பதை அடையாளம் காணமுடியாத  நிலையில சடலம் அழுகிய நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேகாலயாவின் கிழக்கு ஜெய்டியா மலைப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில், கடந்த மாதம் 13 ஆம் திகதி  தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அருகிலுள்ள லிட்டின் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன்காரணமாக வெள்ள நீர், சுரங்கத்துக்குள்ளும் புகுந்ததில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர் அவர்களை  மீட்க தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கெள்ளப்பட்டுவந்தது.

இந்நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மற்றொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

No comments

Powered by Blogger.