குப்பிவிளக்கும் கேப்பாப்பிலவும்..!

குப்பி விளக்கில் ஒளிந்திருக்கிறது
 நிலம் மீதான அழுகை
வாழ்வியல் வண்ணங்களை இழந்த
இனமொன்றின் ஆத்மம் அலைக்கழிக்கப்படுகிறது


நெடுதுயர்ந்த தியாகத்தின் மௌனம்எங்கோர் மூலையில் எழுதிக் கொண்டிருக்கும் அவல நிலத்தின் காரிகையர் வலிகளை

என்றோ ஒரு நாளில்
இருதயக் கிண்ணத்தில் உதிரமுறிஞ்சும் வேந்த காவலரின் கண்கள்
காணாமல்ப் போகும்

அன்றறிவர் குப்பிவிளக்கும் மதுரையாவதை.

-த.செல்வா-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.