யாழில் போராட்டம்!! பல கோரிக்கைளுக்காக!!

வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை, மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது .


ஐனநாயகத்துக்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்னால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போதைப் பொருளைக் கட்டுபடுத்த வேண்டும், சிறுவர் பெண்கள் துஸ்பிரயோகத்தை கட்டுபடுத்த வேண்டும், தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தை 1000 ரூபாயாக உயர்த்த வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் இளைஞர்களது வேலைவாய்ப்புக்களை உறுதிப்படுத்த வேண்டும், இதற்கு அரசியல் தலைமைகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஜனநாயகத்துக்கான இளைஞர் அமைப்புடன் இணைந்து மேலும் பல இளைஞர்களும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.