யாழில் கர்ப்பிணி தாதி தவறான சிகிச்சையால் மரணம்!!
யாழ் பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகஸ்தராக பணி புரியும் திருமதி குலதீபன் பிருந்தா ( வயது 32 ) எனும் 4 வயது பிள்ளையின் தாய் ஒருவர் அகால மரணம் அடைந்துள்ளமை சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த தாதிய உத்தியோகஸ்தர் அண்மைக்காலமாக தீவிர சத்தியால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதற்காக கையில் ஊசி ஒன்றினை ஏற்றி சத்தி மருந்தினை பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை கடமைக்கு வந்த தாதி பிற்பகல் 1 மணியளவில் கடமை முடிந்து வீடு சென்றுள்ளார்.
அங்கு தனது 4 வயது பிள்ளையுடனும் கணவருடனும் சாதாரணமாகவே கதைத்து விட்டு குளியல் அறை சென்றுள்ளார்.
பின்னர் சாப்பிட்டு உறங்கியதாக தெரியவருகின்றது.
பிற்பகல் 2.15 மணியளவில் அவர் கணவரால் இறந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவரிற்கு தீவிர சிகிச்சைகள் வளங்கப்பட்டும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் உடலம் தற்போது மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரண விசாரணை அதிகாரி பார்வையிட்டதன் பின்னர் உடலமானது யாழ் போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக மந்திகை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த தாதியை கையில் ஊசியுடன் வீடு செல்ல எவ்வாறு அனுமதி வளங்கப்பட்டது எனவும், தாதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வீட்டில் வைத்து மருந்தை பயன்படுத்தியதால் மருந்தின் தாக்கத்தால் மரணத்தை தழுவிக் கொண்டார என பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரியவருகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை