ஜப்பான் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு நிதியுதவி

பார்வை குறைபாடு உடையவர்களுக்கு, தகவல் அணுகுதலை உறுதிசெய்யும் திட்டத்திற்கு, அடித்தள மக்களை பாதுகாக்கும் திட்டத்தினூடாக 98,191 அமெரிக்க டொலரை (அண்ணளவாக 16 மில்லியன் ரூபாய்) ஜப்பான் அரசு வழங்கியுள்ளது.


இதற்கான ஒப்பந்தம் ஜனவரி 24ஆம் திகதி, ஜப்பானிய தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் இலங்கை பார்வை குறைபாடுடையோர் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுகத் வசந்த டி சில்வா ஆகியோருக்கிடையில் தூதுவர் வாசஸ்தலத்தில் கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பானிய நிறுவனமொன்றால் தயாரித்து வழங்கப்படும் பிரெய்ல் அச்சிடும் இயந்திரங்களையும் பிரெய்ல் காட்சியுருக்களையும் பயன்படுத்தி பார்வை குறைபாடுடையோர் தகவல்களை எளிதாக பெற்றுக்கொள்வதனை இந்த திட்டம் நோக்காகக் கொண்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் தேசிய வீடமைப்பு மற்றும் சனத்தொகை மதிப்பீட்டிற்கு அமைவாக இலங்கையில் ஏறத்தாழ ஒரு மில்லியன் பார்வை குறைபாடுடையோர் வாழ்கின்றனர்.

இம்மானிய உதவியைப்பெறும் இலங்கை பார்வை குறைபாடுடையோர் பட்டதாரிகள் சங்கம் மாதாந்த சஞ்சிகைகளை பிரெய்ல் முறையில் அச்சிட்டு நாடுமுழுவதிலும் உள்ள நூலகங்களிற்கு விநியோகம் செய்யவுள்ளது.

பிரெய்ல் காட்சி இயந்திரங்கள் சங்கத்தின் மொறட்டுவ தலைமையகத்தில் பொருத்தப்படுவதால் பொதுமக்கள், இதன் உள்ளீடுகளை கணினிகளில் வாசித்தறியலாம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.