குதிரையிடம் மிதி வாங்கினேன் - நடிகர் ஜீவா
இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஜிப்ஸி'. இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஜீவா கூறும் போது, 'கற்றது தமிழ், ஈ போன்ற கதைகளில் ஏன் நடிப்பதில்லை என கேட்டுகொண்டே இருந்தனர். அப்படி ஒரு கதைதான் ஜிப்ஸி.
இந்த கதையை ராஜு முருகன் சொன்னபோதே அதன் முக்கியத்துவத்தை உணர முடிந்தது. நாகூர், வாரணாசி, ஜோத்புர், காஷ்மீர் என இந்தியா முழுவதும் படமாக்கி இருக்கிறோம். படத்தில் வெள்ளை குதிரையொன்றும் முழுக்க என்னுடன் நடித்திருக்கிறது.
அதற்கு கடலைமிட்டாய் வழங்கி நட்பாக்கிக் கொண்டேன். நடனம் ஆடும் திறமை கொண்ட அந்த குதிரை பல முறை என் கால்களை மிதித்திருக்கிறது. குதிரை மிதித்தால் எப்படி வலிக்கும் என்ற அனுபவம் சிலருக்கு இருக்கும். எனக்கு அந்த அனுபவம் இப்படத்தில் ஏற்பட்டது' என்றார்.
இயக்குனர் கூறும்போது, 'ஜிப்ஸி என்றால் நாடோடிகள் என்று அர்த்தம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் உள்ள மக்களின் வாழ்க்கை, அதன் பின்னணியில் உள்ள அரசியல், அதிகாரம் எளிய மக்களை எப்படி வதைக்கிறது, மனித நேயத்தை நோக்கி நகர வேண்டியதன் கட்டாய சூழல் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி இப்படம் பேசுகிறது. இதில் பல மொழிகள் பேசி நடித்திருக்கிறார் ஜீவா. எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு. மேலும் சன்னி வைய்யன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்' என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை