வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யாமல் புறந்தள்ளிய வர்த்தக சங்கம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் அன்மையில் ஏற்றப்பட்ட பாரிய வெள்ளத்தினால் மக்கள் பெரும் துன்பப்பட்டார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் நண்பர்கள் வெளிமாவட்ட வர்த்தக சங்கங்கள் என பலர் உதவிகள் செய்தார்கள்.ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தின் நகர் வர்த்தக சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்திற்கு 450 வர்த்தக நிலையங்கள் உள்ளன. இவ்வர்த்தக நிலையங்களிடம் மாதம் ஒன்றுக்கு ஒரு வர்த்தக நிலையத்திடம் சந்தா பணமாக ரூபாய 150; அறவிடப்படுகின்றது யுத்தம் முடிவுற்ற பின்னர் மீள்குடியேற்றத்தில் இருந்து இன்று வரைக்கும் எத்தனை வருடங்கள் என கணக்கிட்டு பாருங்கள் சங்கத்திற்கு எவ்வளவு நிதி சேகரிக்கப்பட்டுள்ளது என்று.
எமது மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏன் உதவி செய்ய முடியவில்லை...!
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்றப்பட்ட பாரிய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு ஆலையடி வேம்பு வர்த்தக சங்கம், யாழ் வர்த்தக சங்கம், பரந்தன் வர்த்தக சங்கங்கள் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யும் போது ஏன் கிளிநொச்சி மாவட்டத்தின் நகர் வர்த்தக சங்கங்கம் உதவிகள் செய்ய முடியாது என வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்
.jpeg
)





கருத்துகள் இல்லை