புயலாகி எழுந்தவள் வாழ்வு துடுப்பிழந்த படகாவதா...?
தூங்கமுடியாமல் இருந்தது,பலவருடங்களாக இப்படித்தான் என் நாட்களை நகர்த்தியபடியுள்ளேன்,விடிந்தால் விவாகரத்து வழக்கு நீதிமன்றம் போகவேண்டும்,என்ன செய்வது இப்படித்தான் என்வாழ்க்கையும் அமையவேணும் என்றால் யாரால் தடுக்கமுடியும்..?
மீட்சியின்றி தொடரும் என் வாழ்க்கையில் எதை நினைத்தும் என்னால் மகிழ்வாக இருக்க முடியவில்லை..?எனக்கென்றொரு விடியல் இல்லையா..?இப்படியே என் வாழ்க்கையும் நீதிமன்றத்தோடே முடிஞ்சிடுமா...?
எப்படி இன்னொருவரிடம் ஆறுதல்தேடி போகமுடியும் என்னால்...?
எனக்கு வாழ்வில் ஒளியேற்ற வந்தவனே என்வாழ்வை கேள்விக்குறியாக்கிப்போனான் என்பதை எப்படி வெளியசொல்ல முடியும் என்னால்..?திருமணம் வேண்டாம் என்று இருந்திருக்கலாம் என்று என்மனம் கலங்கியபடி இருந்தது,இனி என்ன செய்யமுடியும் எல்லாமே நடந்துமுடிந்துவிட்டதே..?என்னைப் பெற்றவளை குறைகூறுவதா..? படைத்தவனை குறைகூறுவதா.?
நான் போராளியாக இருந்தபோது எவ்வளவு மகிழ்வாக இருந்தேன்,அந்த காலங்களை நான் எண்ணிப்பார்க்கிறேன்,.......
என் இனம் அடிமைப்பட்டு அடிமையாக வாழக்கூடாது மகிழ்வாக வாழவேண்டும் என்று போர்க்களம் சென்றவள் நான், திருமணவாழ்வில் நான் அனுபவித்த இன்னல்கள் இறுதி யுத்தகாலப்பகுதியில் நான் அனுபவித்ததையும் புனர்வாழ்வில் அனுபவித்ததையும்விட பன்மடங்காக உள்ளது,
நான் பேராளியாக பலவருடங்கள் என் தாய்நாட்டிற்காக பணிசெய்தவள்,என்குடும்பத்தில் அப்பா அம்மா, அண்ணா,அக்கா நான்.அன்பான குடும்பம்,அப்பா மரக்காலை வைத்திருந்தபடியால் எமக்கு சிறுவயது முதல் எந்த கஸ்ரமும் இருந்ததில்லை,அம்மாவின் அன்போடும் அப்பாவின் அறிவுரையோடும் வாழ்ந்தவர்கள்,
எனக்கு எங்கள் மாமா போராளியாக இருந்தபடியால் எனக்கும் ஒரு ஆசை.நானும் போராட போகவேண்டும் என்று,அந்த ஆசையை நான் நிறைவேற்றிக்கொண்டேன்,
அம்மா என்னை வெளியில எடுத்துவிட மாமாவை பிடித்து அலுவல் பார்த்தா,நான் மறுத்துவிட்டேன்,அம்மாவின் ஆசை தோற்றுப்போனது,என்ஆசை வென்றுவிட்டது.
நான் போராட்டத்தில் இணைந்த சிறிய காலப்பகுதியில் அண்ணாவும் போராளியாக இணைந்து கொண்டான்.இருவரும் விடுமுறையில் வீட்டிற்குப்போய்வருவோம்,மகிழ்வாக எம் போராட்ட வாழ்வு நகர்ந்தது,
யுத்தம் தொடங்கி அகோரமான தாக்குதல்கள் இருபக்கத்தாலும் நடந்தபடி இருந்தது,எங்கள் குடும்பம் வலைஞர்மடம் மாதா கோயிலடியில் இருக்கும்போது செல் விழுந்து அப்பாவிற்கு இடுப்பிற்குகீழ் இயங்காமல் போனது,அப்பா செஞ்சிலுவைச் சங்க கப்பல் ஊடாக வவுனியா கொண்டுசெல்லப்பட்டார்,
அக்காவும் காயப்பட்டாள்,அருகினில் செல்விழுந்த அதிர்ச்சி தனக்கு ஏற்பட்ட காயம் அப்பாவின் காயத்தை பார்த்த அதிர்ச்சியில் அக்கா ஒரு நோயாளி என்ற நிலைக்கே சென்றுவிட்டாள்.அண்ணா களமுனையில் நின்றபடியால் அண்ணா எதையும் அறியவில்லை,மாமா ஊடாக தகவல் அறிந்து ஓடினேன்,
அம்மாவை பார்க்கவே முடியாமல் இருந்தது,இயக்கத்தை விட்டிட்டுவரும்படி என்னைக்கட்டிப்பிடித்து அழுதா,என்னால் வீட்டிற்குபோகும்முடிவை எடுக்கமுடியவில்லை,கவலைகளை காட்டிக்கொடுக்காமல் நான் மீண்டும் களமுனை வந்துவிட்டேன்,
அப்பா அக்காவின் நிலையறியாமலே அண்ணாவும் முள்ளிவாய்க்கால் இரட்டை பனையடிப்பகுதியில் இராணுவத்தினருடனான நேரடி மோதலின்போது மேஜர் அகவாணனாக வீரச்சாவைத் தழுவிக்கொண்டான்,அண்ணா வீரச்சாவு என்று எனக்கு தகவல் தந்தார்கள்,
அண்ணா வீரச்சாவு என்பதுவும் அண்ணாவின் வித்துடலை நானும் நின்று விதைத்தேன் என்பதுவும் எங்கள் குடும்பத்தவர்களிற்கு இன்றுவரை தெரியாது,அண்ணா இறுதிநேரம் காணாமல் போய்விட்டார் என்றே எண்ணிக்கொண்டு இருக்கின்றனர்,நான் கூறாமைக்கு காரணம் அப்பா அக்காவின் நிலைப்பாடே ,அவர்களால் அம்மா மனம்உடைந்துபோயிருந்தா,அந்த சூழலில் அண்ணாவின்இழப்பை எப்படிக்கூறமுடியும்..?நாளடைவிலும் என்னால் கூறமுடியாமல் போய்விட்டது,
யுத்தத்தின் முடிவுக்கு இறுதி நாளான அன்று மக்கள் போராளிகள் என்று வட்டுவாகல் பாலம் ஊடாக எல்லோரும் இராணுவத்தினரிடம் சரணடைந்து சென்றுகொண்டிருந்தார்கள்,என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தோம்,
அனேகம்பேர் சென்றுவிட்டார்கள்,நானும் சில தோழிகளும் நின்றோம்,இராணுவமும் எமக்கருகில் நெருங்கி வந்துகொண்டிருந்தான்,அப்போதுதான் ஓர் அம்மா ஓடிவந்து பிள்ள இந்தாம்மா என்ர மகளும் இயக்கம்தான். அவளைக்கூட்டிக்கொண்டு போகதான் இந்த உடுப்போட பார்த்துகொண்டு நின்றன்,ஆமி கிட்டவந்திட்டான்,என்ர பிள்ளைவேற நீ வேறயா..?
நீ இந்த உடுப்பை போட்டுகொண்டுவாம்மா என்று என்னைப்பிடித்து அழுதா,அம்மா நான் தலைமுடியை வெட்டிவிட்டேன்,வந்தாலும் ஆமி பிடிச்சிடுவான், நான் வரேல என்று மறுத்தபோதும் அந்ததாய் விடவில்லை,
பிள்ளை வாம்மா நான் என்ர பெத்தபிள்ளையா நினைத்து கூட்டிப்போகிறேன் என்று கெஞ்சினா,ஆமி அருகில் வந்துவிட்டான்,என்னில் இருந்து சிறிய தூரத்தில் ஆமியும் நின்றான்,
அந்த அம்மா சொன்னா பிள்ள ஆமிபிடிச்சி ஏதும் செய்துபோடுவான் வேளைக்கு உடுப்ப போட்டிட்டு தலைக்கு இந்த துணியைபோட்டுக்கொண்டு வாம்மா என்று கெஞ்சினா.யார் இந்த அம்மா இப்படி என்னை காப்பாற்ற துடிக்கிறா..?அத்தாயின் அன்பில் நெகிழ்ந்தே போனேன்,இதுதான் போர்க்களத்தில் நிற்கும் போராளிகள் மீது எம்மக்கள் எம்மில் காட்டும் அன்புஎன்பதை புரிந்துகொண்டேன்,
ஓமந்தைவரை அந்த அம்மாவோடு சென்றேன்,இராணுவம் ஒலிபெருக்கிமூலம் அறிவிப்பது கேட்டது,ஓர்நாள் போராளியாக இருந்தாலும் அல்லது இயக்க நிறவனங்களில் வேலைசெய்திருந்தாலும் பெயரை பதிந்துவிட்டு போகும்படியான அறிவிப்பே அது,
அந்த அம்மா பாவம் இவளவு தூரம் என்னை காப்பாற்றிவந்து விட்டிருக்கிறாவே,பிறகு என்னால அம்மாக்கு பிரச்சனை வரக்கூடாதென்று பெயர்பதிய போனேன்.அம்மா விடவில்லை,ஆனாலும் அம்மாவின் நலனிற்காக நான் போனேன்
16மாதங்கள் புனர்வாழ்வு முகாமில் இருந்தேன்,பூந்தோட்டம்,பம்பைமடு,செட்டிக்குளம்,கொழும்பு என்று நீண்டது,
16 மாதங்களில் என்னை என் அம்மா வவுனியா அருணாச்சலம் முகாமில் இருந்து 4தடவையே பார்க்கவந்தவா,அவவும் முகாமில் என்றால் என்னத்தை கொண்டுவந்து தந்துபார்ப்பா,ஆசைக்கு வயிறுநிறைய சாப்பிடனும் ஒரு உடுப்பாவது மாறிப்போட அம்மா கொண்டுவந்து தரமாட்டாவா என்று பெற்றோர் சந்திப்பிடத்தை பார்த்து ஏங்கியபடி இருப்பேன்,
இறந்தபின் நரகத்திற்கு போவினம் என்று சொல்வார்கள்,நான் இருக்கம்போதே நரகத்தை பார்த்து வளர்ந்தவள்,சரணடைய போகும்போது போட்டுக்கொண்டுபோன உடுப்போடு குளித்து அப்படியே வெய்யிலில் நின்று உடையை காயவிட்டு,சாப்பாடில்லாம குளிக்க தண்ணி இல்லாம தூங்க இடமில்லாமல் அந்த நரகவாழ்வை கழித்து புனர்வாழ்வில் இருந்து விடுதலைபெற்றேன்,
அம்மாவும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு வந்திட்டா,வீட்டுத்திட்டமும் தந்து வீடும்கட்டி இருந்தோம்,வவுனியாவில ஒரு நல்ல பெடியன் இருக்கிறானாம் அண்ணா அக்காவும் ஏலாமல் போட்டினமாம் என்ர பிள்ளையாவது சந்தோசமா இருக்கோணுமாம் என்று அம்மா திருமணம் பேசினா,
புனர்வாழ்வு வாழ்கை.போராட்டவாழ்க்கை.அண்ணாவின் இழப்பு என்று என்னை பாதித்திருந்தபடியால் மறுத்தேன்,அம்மா என் சம்பந்தம் இல்லாமலே நாளினை குறித்து திருமண எழுத்திற்கும் நாளினை வைத்துவிட்டா,
திருமணம் என்பதை நினைக்க எனக்கு வாழ்க்கையே வெறுத்துபோனது,திடீரென ஒருநாள் திருமண எழுத்தை எழுதிவிட்டு விட்டுவிட்டார்கள்,மணமகனின் முகத்தைகூட நான் திருமண எழுத்துநேரமே பார்த்தேன்,
எல்லாமே கனவுபோல இருந்தது,இனி என்ன செய்வது அம்மாவிற்காக மனதை திடப்படுத்திக்கொண்டேன்,திருமணம் செய்த அன்று ஓர்இரு வார்த்தை கதைத்த என் கணவன் அன்றில் இருந்து என்னுடன் கதைப்பதே இல்லை,
இரவில் எப்போது வெளியில் போகிறான் எப்போது வீடு திரும்புகிறான் என்பதே தெரியாமல் போனது,அவனிற்காக காத்திருந்துவிட்டு நானும் சாப்பிடாம தூங்கியநாட்களே அதிகம்,
இப்படியே 3மாதம் கழிந்தது,வேண்டா பொண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாளும் குற்றம் என்ற நிலையானது,காரணமின்றிய புறக்கணிப்புக்கள் மரணவலியை தந்துவிடும்,அதுவும் என் வாழ்வில் துணையாகவந்தவனே இப்படி செய்யும்போது என்ன செய்யமுடியும்...?
இந்த மூன்று மாதத்தில் ஒரு கோயில்குளம் கூட்டிபோனதோ ஒரு உடுப்புவாங்கி தந்ததோ என்னோடு பேசிச்சிரித்ததோ கிடையாது,
அம்மா இதை அவதானித்துவிட்டு என்னிடம் கேட்டா பிள்ளை மருமகனும் நீயும் சந்தோசமாகத்தானே இருக்கிறியல்..?ஏதும் பிரச்சனையே என்று கேட்டா,அம்மாவிற்கு எப்படி சொல்லமுடியும் எழுத்து எழுதிய நாளில் இருந்து அவன் யாரோ நான் யாரோ என்று வாழ்வதை,
என்னைப் பெற்றவள் கவலைபடக்கூடாது என்பதற்காக பொய் சொன்னேன்,அப்படி எதுவும் இல்லை அம்மா.நான் சந்தோசமாகத்தான் இருக்கிறேன் என்றேன்,அதன் பின்பே என் கணவனின் நடவடிக்கைகளை அவதானித்தேன்,வீட்டில் நிற்கும் நேரங்களில் யாருடனோ தொலைபேசியில் அடிக்க கதைப்பது தெரிந்தது,
அவரிற்கும் யாரோ ஒரு பெண்ணிற்கும் தொடர்பிருப்பதை உணரமுடிந்தது,தொலைபேசியில் பார்க்கமுடியாது,தொலைபேசியிற்கு கோட் நம்பர் கொடுத்திருந்தார்,
அதனால் அவரிற்கு தெரியாமல் அவரது பேர்சை எடுத்துபார்த்தேன்,ஓர் பெண்ணும் என் கணவனும் ஜோடியாக எடுத்த படம் இருந்தது,
எனக்கு நெஞ்சிற்குள் ஏதோ செய்வதுபோல இருந்தது,மனம் வேதனையில் துடித்தது.நம்பி போனவனின் துரோகத்தை எண்ணி மனம்விட்டு அழுதேன்,அம்மாக்கு சொன்னா அம்மா கவலைபடுவா,என்கவலைகளை எனக்குள்பூட்டி வைத்தேன்,
இப்படி இருந்து தாமரையும் தண்ணீரையும்போல் ஒட்டாத வாழ்வு வாழ்வதைவிட இரண்டில் ஒரு முடிவைகேட்டுவிடவேண்டியதுதான் என்று நினைத்து அவனிடம் கேட்டேன்,
யார் அந்த பெண் என்று.
அவன் சாதாரணமாக பதில் சொன்னான்.என்னை திருமணம் செய்யமுதல் அவளை வைத்திருப்பதாகவும் அவள் திருமணம் செய்தபிறகும் விடுகிறாள் இல்லை அதனால தன்னால் எதுவும் செய்யமுடியாதென்றும்கூறி முடித்தான்.
நான் பேசினேன்,அவள்தான் வேணும் என்றால் ஏன் என்ர வாழ்வை சீரழித்தனி,அவளோடயே வாழ்ந்திருக்கலாம்தானேஎன்றேன்,அன்றில் இருந்து தொடங்கின அடிஆக்கினைதான்,
என் கைகளைகூட ஈவிரக்கமின்றி அடிச்சு முறித்தான், பல மாதங்கள் என்னை கொடுமைப்படுத்தினான், தினம்தினம் அடித்தே என்னை வதைத்தான், ஒருநாள் சுடு சோற்றை தலையில் பானையோடு கொட்டினான்,அன்றுதான் முடிவெடுத்தேன் இவனோடு இனியும் வாழமுடியாதென்று,
நான் விவாகரத்திற்கு போடபோகிறேன் என்று சொன்னேன்,என்னை பேசினான் இயக்கத்தில இருந்த குணத்தை காட்டுறியோ,ஆம்பிளையலபோல மல்லுக்கட்டுறாய் பிரபாகரன் உன்னை இப்படியோ வளர்த்தவர் என்றான்...?இயக்கத்தில் இருந்தம் ஒழுக்கமா வளர்ந்தம்,இதைவிட வேறென்ன வேண்டும்...?
ஒழுக்கம் கெட்டவன் எல்லாம் என் அண்ணனை இழுப்பதா...?கடவுளுக்கே மேலான என் அண்ணனையே இந்த கேவலங்கெட்ட பொம்பிளைபொறுக்கி இழுத்துகதைக்கும்போது எதைச்சொல்வது,அன்றுதான் தீர்க்கமான முடிவெடுத்தேன்,இவன் அந்த பொண்ணோடே வாழட்டும்.நான் பெயருக்கு மட்டும் மனைவியாக இருக்காமல் அவனை விடுதலை செய்துவிடுவோம்,அவன் தனக்கு பிடிச்சவளோடா வாழட்டும் என்று தீர்மானித்தேன்,
இன்றைய வழக்கில் நீதிமன்றத்தில் என் இறுதி முடிவை கூறிவிட்டு வரபோகிறேன்,என் தலைவிதியும் இவ்வளவுதான் என்றால் என்னால் என்ன செய்யமுடியும்...?
என் கணவனிடம் இருந்து விவாகரத்துபெற்றபின் களமுனைகளில் அங்கவீனம் அடைந்த முன்னால் போராளிகளை ஒன்றுசேர்த்து அவர்களை பராமரிக்க வேண்டும் என்பதே இன்று என் ஆசையும் கனவும்,என் மாவீரச்செல்வங்களின் ஆசியோடு என்பணிதொடர்வேன்.
**பிரபாஅன்பு**
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை