அதிகாரிகள் அசமந்தம் !! வீணாகும் விவசாய நிலங்கள்!!

வவுனியா மாவட்டத்தில் போர்க்க காலத்தில் அமைக்கப்பட்ட 22 கிலோ மீற்றர் மண் தடுப்பணைகள் அகற்றப்படும் என்று மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டு, 27 மாதங்கள் கடந்து விட்ட போதும் எந்த நடவடிக்கையும் இடம்பெறவில்லை என்று விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

படையினரால் அமைக்கப்பட்ட குறித்த மண் தடுப்பணைகளால் பெருமளவு விவசாய நிலங்கள் இன்று வரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். அவற்றை அகற்றுமாறு 2016 ஆம் ஆண்டு மாவட்டச் செயலரிடம் பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கை, பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கு அறிவிக்கப்பட்டது. இதன் பிரகாரம் வவுனியாவில் உள்ள 22 கிலோ மீற்றர் தடுப்பணைகளை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப செப்பனிடுவதற்கான செலவு மதிப்பீடு ஒன்றை தயாரித்து வழங்குமாறு கோரப்பட்டது.

தடுப்பணைகளை அகற்ற 15 மில்லியன் ரூபா தேவையென 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாவட்டச் செயலகத்தினால் மதிப்பிடப்பட்டு அதன் செலவு மதிப்பீடுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

செலவு விபரத்தைத் தயாரித்து பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி உள்ளோம் எனக்கூறி மாவட்டச் செயலக அதிகாரிகள் காலம் கடத்துகின்றனர்.

இது தொடர்பிலும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.