அமெரிக்காவுடன் உறவை ஏற்படுத்த வட.கொரியா விருப்பம்!


அமெரிக்காவுடன் அமைதியான, சிறந்த உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்புவதாக வட.கொரியா அறிவித்துள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வட.கொரிய தூதுவர் இன்று (செவ்வாய்க்கிழமை) இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்க ஜனாதிபதிக்கும், வட.கொரிய தலைவருக்கும் இடையே கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற உச்சிமாநாட்டிற்கு அமைய புதிய இரு தரப்பு உறவை ஏற்படுத்த வட.கொரியா எதிர்பார்த்துள்ளது.


 அதற்கமைய அணுவாயுதங்களை நாம் இனி தயாரிக்கவோ, சோதனை செய்யவோ போவதில்லை என்றும் அறிவித்துள்ளோம். அதற்கமைய அணுவாயுத பாவனையை முற்றாக ஒழிக்கும் எமது முயற்சிகளுக்கு அமெரிக்கா நம்பகமான முறையில் பதிலளிக்குமாயின், அமெரிக்காவுடனான இருதரப்பு உறவு சிறப்பாக வேகமாக வலுவடையும்” எனத் தெரிவித்தார்.

 எனினும், இதன்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வட.கொரிய தலைவருக்கும் இடையிலான இரண்டாவது உச்சிமாநாடு தொடர்பான எவ்வித மேலதிக தகவல்களையும் அவர் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.