இது வாழாவெட்டிகளின் கனவு...!

நினைவுகள் ஏதோ சமூகம் என்று
என்னைச் சுற்றி சுற்றி வந்தாலும்..
வானமும் இருட்டும் என்னை ஈர்க்கும்
தருணங்களில்...


மீட்டிப் பார்க்கும் கடந்த காலங்களின்
எண்ணங்கள் எல்லாம் வர்ணங்களாகி
வானவில்லாய் என்னைத் தழுவத் துடிக்கையில்..

நீயாக நான் எண்ணிப் பேசும்
நட்சத்திரத்தின் ஒளியில்..
கண் சிமிட்டும் உந்தன் காதல் பார்வையில்..
ஏனோ நானும் கரைந்து போகையில்..

இயற்கையுடன் இயைந்து எனது
கனவுகள் வேண்டும்..
நான் நானாகித் தேடும் தடங்களின்
வழியில் நகரும் கணங்களில்..

பார்த்து பேசிப் பழகிய நிமிடங்கள்..
நினைவிகளாகி கைகோர்த்து செல்ல..
கடக்கும் தடங்களில்..
தேடுகிறேன் உன் நிழலையேனும்...
பிம்பச் சிறைக்குள் சிறைப்பட்டிருக்கும்... என் சின்ன ஆசைகள்..
கை சேரும் கனவுகளிலேனும்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.