ஸ்ரீலங்கா வருகிறது மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்கள்!!
எங்கள் வீரர்களின் கல்லறைகளை உழுதவா்கள். தங்கள் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனா்.
மாலியில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் கடமையாற்றிய நிலையில் தாக்குதல் சம்பவம் ஒன்றில் உயிரிழந்த ஸ்ரீலங்கா இராணுவ வீரர்கள் இருவரது உடல்கள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டிற்குக் கொண்டுவரப்படவுள்ளன.
உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்படும் என, ஸ்ரீலங்கா இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களது உடல்கள் கொண்டுவரப்படும் வேளை இராணுவ தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவின் தலைமையில் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் செலுத்தப்படவுள்ளது.
மாலியின் டுஎன்ட்ஸா பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ட்ரக் வண்டி மீது கடந்த 25 ஆம் திகதி தொலைதூரத்திலிருந்து அதி நவீன மற்றும் அதிசக்தி வாய்ந்த தன்னியக்க குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இராணுவக் கெப்டன் ஒருவரும் மேலும் ஒரு இராணுவ வீரரும் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று ஸ்ரீலங்கா அமைதி காக்கும் படையினர் காயமடைந்த நிலையில் மாலி காவோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை