நீதி­மன்றை நாடும் பெர­முன!!

தேர்­தல் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய பதவி விலக வேண்­டிய அவ­சி­யம் ஏதும் கிடை­யாது.
மாகா­ணத் தேர்­தலை விரை­வாக நடத்­து­வ­தற்­காக பொது­ஜன பெர­முன முன்­னணி நீதி­மன்­றத்தை நாட­வுள்­ளது. இந்த முயற்­சிக்கு தேர்­தல் ஆணைக்­குழு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டும்.

இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லக்ஸ்­மன் யாப்பா அபே­வர்த்­தன தெரி­வித்­தார்.

பொது­ஜன பெர­முன முன்­ன­ணி­யின் தலை­மைக் காரி­யா­ல­யத்­தில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­த­தா­வது-

நவம்­பர் மாதம் 10ஆம் திக­திக்கு முன்­னர் மாகாண சபை தேர்­தலை அரசு நடத்­தா­விட்­டால் தனது பத­வியை துறப்­பேன் என்று தேர்­தல் ஆணைக் குழு­வின் தலை­வர் கூறி­யுள்­ளமை வருந்­தத்­தக்­கது. மக்­க­ளின் அடிப்­ப­டைய உரி­மை­யைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஐக்­கிய தேசி­யக் கட்சி அர­சு­டன் போராட வேண்­டி­யுள்­ளது. கடந்த அர­சில் பல நெருக்­க­டி­கள் காணப்­பட்­ட­போ­தும் தேர்­தல்­கள் உரிய காலத்­தில் நடத்­தப்­பட்­டன.

மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்­காக தேர்­தல் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் பதவி வில­கு­வது என்­பது பொருத்­த­மற்ற விட­யம். தேர்­தலை விரை­வு­ப­டுத்த கடந்த காலங்­க­ளில் அவர் எடுத்த முயற்­சி­கள் அனைத்­தும் தோல்­வி­யில் முடிந்­துள்­ளன. கட்சி தலை­வர்­க­ளு­டன் முன்­னெ­டுத்த பேச்­சுக்­கள் முரண்­பா­டு­க­ளைத் தோற்­று­விப்­ப­தா­கவே அமைந்­தது. பேச்சை இனி முன்­னெ­டுப்­ப­தால் எவ்­வி­த­மான தீர்­மா­னங்­க­ளும் பெற முடி­யாது.

மாகாண சபை தேர்­தலை நடத்­து­வ­தற்­காக பொது­ஜன பெர­முன முன்­ன­ணி­யி­னர் தற்­போது நீதி­மன்­றத்தை நாட தீர்­மா­னித்­துள்­ள­னர். அதற்கு தேர்­தல்­ஆ­ணைக்­கு­ழு­வின் தலை­வ­ரும், ஆணை­ய­க­மும் ஒத்­து­ழைப்பு வழங்­கி­னால் பெரும் பல­மாக காணப்­ப­டும்.

மாகாண சபை தேர்­தலை பழை­ய­மு­றை­யில் நடத்­து­வ­தற்கு நாடா­ளு­மன்­றத்­தில் ஐக்­கிய தேசிய கட்­சித் தவிர்த்து பிற கட்­சி­கள் இணக்­கம் தெரி­வித்­துள்­ளன. மாகாண சபைத் தேர்­த­லைப் புதிய முறை­யில் நடத்­து­வது சாத்­தி­ய­மற்ற விட­ய­மா­கும்.

மாகாண சபை தேர்­தலை நடத்­து­வ­தற்­கான அறி­விப்பை விடுக்­கா­மல் நவெம்­பர் மாதம் வரை இழுத்­த­டித்து அரச தலை­வர் தேர்­த­லுக்­கான அறி­விப்பை விடுப்­பதே அர­சின் பிர­தான திட்­டம். அதற்கு ஒரு­போ­தும் இட­ம­ளிக்க முடி­யாது.

அரச தலை­வர் தேர்­தல் எப்­போது நடை­பெற வேண்­டும் என்­பதை அரச தலை­வர் உரி­ய­கா­லத்­தில் தீர்­மா­னிப்­பார். தற்­போது அரச தலை­வர் வேட்­பா­ளர் யார் என்­பது தொடர்­பில் கவ­னம் செலுத்­து­வது தேவை­யற்ற விட­ய­மா­கும் என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.