படைப்புழு தாக்கத்திற்குள்ளான விவசாயச் செய்கையின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

அதற்கிணங்க, நட்டஈடு வழங்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அந்நியப் படைப்புழுத் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளது விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இதுவரை தங்களது விபரங்களைப் பதிவு செய்யாத விவசாயிகள் அருகிலுள்ள கமநல அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பி.இக்பால் கேட்டுக்கொண்டார்.
மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் பணிப்பிற்கமைய உடனடியாக படைப்புழுத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சோளப்பயிர்ச் செய்கையாளருக்காக நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது விபரங்களை பதிவு செய்துகொள்ளுமாறும், அது தொடர்பான அதிகாரிகளினால் பரீசிலனைகள் மேற்கொள்ளப்பட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1000 ஹெக்ரேயர் வரையில் சோளம் செய்கை பயிரிடப்பட்டிருந்ததுடன், அதில் 689 ஹெக்ரேயர் சோளன் செய்கை பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக 1500 பேர் வரையான விவசாயிகள் நட்டத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், விவசாய போதனாசிரியர் பிரிவுகள் பிரதேச செயலகம், மாவட்ட ரீதியாகவும், விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வுகள் நடைபெற்று வருகின்றன என்றும் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் வை.பி. இக்பால் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை