ரூ.50 கோடி வசூல்: மகுடம் சூடிய ‛மணிகர்ணிகா’
பிரபல நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள, ‛மணிகர்ணிகா’ திரைப்படம் வெளியாகி, ஐந்து நாட்களில், 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
பாலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் நடிகை கங்கனா ரணாவத், தற்போது இயக்கத்திலும் களம் இறங்கி ஒரு கலக்கு கலக்கியுள்ளார். சுதந்திர போராட்ட வீராங்கனை, ஜான்சி ராணி லட்சுமி பாயின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் ‛மணிகர்ணிகா’
இதை, ராதாகிருஷ்ண ஜகர்லாமுதி எனப்படும், கிரிஷ் மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. சுதந்திர போராட்ட வரலாற்றை சித்தரிக்கும் இப்படத்தில், ராணி லட்சுமி பாயின் கதாபாத்திரத்தில், கங்கனா நடித்துள்ளார்.
இப்படம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும், இந்தியா உட்பட, 50 நாடுகளில், 3,700 திரைகளில், இம்மாதம், 25ம் தேதி திரையிடப்பட்டது. படம் வெளியான நாள் முதலே வசூலை அள்ளிக்குவித்த மணிகர்ணிகா, ஐந்தே நாட்களில், 52 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இது, படக்குழுவினரை மட்டுமின்றி, கங்கனாவின் ரசிகர்கள் மற்றும் வரலாற்று திரைப்படங்களை விரும்பும் சினிமா பிரியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை