பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சட்டத்தரணி ஸ்ரீகாந்தாவின் ஓட்டைகள்!


(த.செல்வா)
பதின்ம வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவரை பிணையில் எடுக்க முயற்சித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ரெலோவின் தலைவர் ஸ்ரீகாந்தா...


இவர் ஏற்கனவே வட்டுக்கோட்டையில் ஆசிரியர் ஒருவரினதும் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் ஆசிரியரை பிணை எடுக்க முயற்சித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் சமூகத்தில் வித்தியாக்கள் உருவாகுவதற்கும் கஞ்சாக்கள் கரைபுரண்டோடுவதற்கும் சட்டத்தரணிகளும்
காரணமென்பதை ஏன் மறந்து விடுகின்றோம் ஏன் அவர்களை எதிர்க்கத் தவறுகிறோம்

ஒரு சட்டத் தரணியின் வீடு பளிங்கு மாளிகையால் அமைக்கப்பட்டதென்றால் அந்த வீட்டில் ஒரு நாள் தங்கிப் பாருங்கள் ஒரு சட்டத் தரணியின் லட்சம் பெறுமதியான காரில் பயணித்துப் போருங்கள் நரக வேதனையை உணர்வீர்கள்

ஏனெனில் அவர்களின் சேர்த்த சொத்து ஏழை மக்களின் அழுகையில் கொள்ளையிடப்பட்டது சீனச் சுவரைக் கட்டியது போல் ஏழை மக்களின் தசையிலும் எலும்பிலும் கட்டப்பட்ட மாளிகைகள்

அவர்கள் அருந்தும் வியரிலும் சாரயத்திலும் அப்பாவிச் சிறுமிகளின் உதிரம் தெரியும் ஆனாலும் அதையும் அவர்கள் ரசித்துக் குடிப்பர்

ஏனெனில் நாம் சட்டம் படித்து விட்டோம் என்ற திமிரும் பணத்திமிரும்

படிப்பறிவோ உலகறிவோ இல்லாமல் சூழ்நிலை காரணமாகத் சிறிய தவறு செய்த கிணற்றுத் தவளைகளைத் தண்டிக்கிறோம் பெரும் முதலைகளுக்கு சலூட்டடித்தவாறு இந்தச் சமூகம் எப்படி உருப்படும் பெண்களுக்கு எப்படி விடுதலை கிடைக்கும்

சிறீகாந்த போன்ற ஆண்முதலையைப் பார்த்து இப்போது பெண் முதலைகளும் வீராப்புக் காட்டத் தொடங்கியுள்ளன அண்மையில் யாழ்மாவட்டத்தில் தேடப்படும் குற்றவாளி ஒருவரை பெண் சட்டத்தரணி அவரைக் காப்பாற்றுவதற்கு  தனது வாகனத்தில் நீதிமன்றுக்கு ஏற்றிச் சென்று பொலிசாருடன் முரண் பட்ட வேடிக்கை நிகழ்வினை அறிந்திருப்பீர்கள்

கிளிநொச்சி மாவட்டத்திலும் கள்ளத் தொடர்பு காரணமாய் தனது மனைவியைக் குத்திக் கொன்ற கொலையாளியை தனது வாதத் திறனை வைத்து பிணையில் செல்ல வழி சமைத்தவர் ஒரு பெண் சட்டத் தரணியே

இப்படிக் கேடுகெட்ட செயலுக்கு துணிந்து விட்ட பெண் சட்டத் தரணிகள் இருவரையும் கணவர் விட்டுச் சென்றதாகவே அறியக் கிடைக்கிறது இவர்களின் குருவாக சிறீயே இருக்க வேண்டும் இவர்களால் வேதனையில் வேகுபவர் ஏழைமகன்களே

கஞ்சாப் பிரச்சினை கற்பழிப்புப் பிரச்சினை களவுப் பிரச்சினை வீதி விபத்துப் பிரச்சினை பெண் விடுதலைப் பிரச்சினை எனக் குமுறும் சமூகம் இந்தச் சட்டத்தரணி முதலைகளைத் தண்டிக்காதது

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும் எல்லாச் சட்டத் தரணிகளையும் குற்றம் சாட்டவும் முடியாது சேக்பியரின் வெனிசு நகர வணிகன் நாடகத்தில் வரும் சட்டத்தரணி போர்சியா போல் இலவசமாகவும் ஏழை மக்களுக்காகவும் போராடுபவர்களும் உண்டு

அண்மையில் புத்தர் சிலை விவகாரம் நில மீட்புக்காகப் போராடிய சட்டத்தரணிகளுக்கு அன்பான வாழ்த்துக்கள்


ஆனால் மக்கள் அவலபடும் போது பதுங்கிக் கிடந்து விட்டு பின் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திர வாழ்வை அனுபவிக்கத் தொடங்கையில் அவர்களின் இரத்தம் குடிக்கும் மேல்ச் சொன்ன முதலைகளை என்ன செய்யலாம் நண்பர்களே

போதாக்குறைக்கு அரசியல் வேறு எங்களுக்குத் தேவை சட்டத்தின் ஓட்டைகளை அடைப்பவர்களே ஓட்டைகள் அல்ல

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.