தொடரூந்துப் பொதியும் கிடைத்த ஏமாற்றமும்.

வன்­னி­யில் வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்குத் தொட­ருந்­தில் உத­விப் பொருள்­கள் நேற்று எடுத்­து­வ­ரப்­பட்­டன.
அதி­க­ள­வி­லான பொருள்­கள்  கொண்­டு­வ­ரப்­ப­டும் என்ற எதிர்­பார்­பில் சென்ற அதி­கா­ரி­க­ளும், முன்­னாள் அமைச்­ச­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா ஆகி­யோர் ஏமாற்­ற­ம­டைந்­த­னர்.
அரச தலை­வர் செய­ல­கத்­தின் ஏற்­பாட்­டில், தொட­ருந்து சேவை­யைப் பாது­காப்­போம் என்ற அமைப்­பு­டன் இணைந்து தெற்­கி­லி­ருந்து உத­விப் பொருட்­க­ளைச் சேர்த்­துக் கொண்டு சிறப்­புத் தொட­ருந்து கிளி­நொச்­சியை நேற்று வந்­த­டைந்­தது.
முல்­லைத்­தீவு மாவட்டத்­துக்­கான உத­விப் பொருட்கள் மாங்­கு­ளம் தொட­ருந்து நிலை­யத்­தில் வைத்து வழங்­கப்­பட்­டது. உத­விப் பொருள்­களை ஏற்­றிச் செல்­வ­தற்­காக மாவட்­டச் செய­ல­கத்­தின் ஏற்­பாட்­டில் இரா­ணு­வத்­தி­ன­ரின் 4 ட்ரக் வண்­டி­கள் ஒழுங்கு செய்­யப்­பட்­டன.
மாவட்­டச் செய­லர் திரு­மதி ரூப­வதி கேதீஸ்­வ­ரன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, இரா­ணு­வத் தள­ப­தி­கள், பிர­தேச செய­லர்­கள் ஆகி­யோ­ரு­டன் வடக்கு மாகாண ஆளு­நர் செய­லக ஊழி­யர்­க­ளும் மாங்­கு­ளம் தொட­ருந்து நிலை­யத்­தில் காத்­தி­ருந்­த­னர்.
தொட­ருந்­தும் வந்­த­தும் பொருள்­கள் இறக்­கப்­பட்­டன. ஆயி­ரத்து 400 கிலோ அரி­சி­யும், 20 பொதி தண்­ணீர்ப் போத்­தல்­க­ளும் எடுத்து வரப்­பட்­டன. இதன் பெறு­மதி 3 லட்­சம் ரூபா என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதி­க­ள­வி­லான உத­விப் பொருள்­கள் கொண்டு வரப்­ப­டும் என்ற எதிர்­பார்ப்­பில் சென்ற அதி­கா­ரி­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஆகி­யோர் ஏமாற்­ற­ம­டைந்­த­னர்.
‘5 கிலோ அரி­சிப் பொதி­யில் 250, 10 கிலோ அரி­சிப் பொதி­யில் 7, 25 அரி­சிப் பொதி­யில் ஒன்று, 15 பொதி தண்­ணீர்ப் போத்­தல்­கள் மற்­றும் பாடக் கொப்­பி­கள் 12 டசின் எம்­மி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது’ என்று முல்­லைத்­தீவு மாவட்­டச் செய­லர் திரு­மதி ரூப­வதி கேதீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.
கிளி­நொச்சி தொட­ருந்து நிலை­யத்­தில் வைத்து கிளி­நொச்சி மாவட்­டச் செய­லர் சு.அரு­மை­நா­ய­கத்­தி­டம் உத­விப் பொருள்­க­ளைக் கைய­ளித்­த­னர். பொருள்­க­ளின் விப­ரங்­களை மாவட்­டச் செய­ல­கம் வெளி­யி­ட­வில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.