இந்தியக் கடலில் மாயமான மன்னார் மீனவர்கள்!

தமிழகம், இராமேஸ்வரம் – சேரான்கோட்டை கடற்பகுதியில் கரை ஒதுங்கிய படகு இலங்கை, மன்னார் – வங்காலை பகுதியை சேர்ந்த மீனவர்களுடையது என வடமாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது;


இந்த படகில் நேற்று மாலை மீனவர்கள் இருவர் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை படகு சேரான்கோட்டை கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.எனினும், இதில் பயணித்த இரு மீனவர்களும் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த இருவர் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.மேலும், முடிந்தவரை இந்திய தமிழக மற்றும் மீனவர் தரப்பு, இவர்களை கண்டு உரிய குடும்பத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
Powered by Blogger.