தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவா்கள் அல்ல.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல
என வட மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தனது காலத்திற்குள் ஒரு தீர்வினை அடைய வேண்டுமென பிரபாகரன் எண்ணியதை போன்று, த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். கள்வியங்காட்டில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர் சந்திப்பொன்று நடைபெற்றிருந்தது.


இதன்போது, அண்மையில் யாழில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விடுதலைப் புலிகள் ஜனநாயகத்தை விருப்பவில்லை.அதனால் தான் கட்சித் தலைவர்களையும் கொலை செய்தார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் கூறியிருந்தார்.

அவரின் கருத்து தொடர்பில் கேட்டபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவை சந்திப்பதற்கு என்னைத் தெரிவு செய்து அனுப்பியிருந்தார்.

நாங்கள் தினமும் சண்டை பிடித்துக்கொண்டிருக்க முடியாது. நாடாளுமன்ற அரசியலிலும் ஈடுபட வேண்டிய தேவை இருக்கின்றது.அந்தவகையில் ஜனநாயக வழிமுறைகளையும் முன்னெடுக்க வேண்டுமென பிரபாகரன் என்னிடம் கூறினார்.

நீண்ட நாட்களின் பின்னர் பேசப்படுவதனால், மறைக்கப்பட்டிருக்கலாம் அல்லது மறுக்கப்பட்டிருக்கலாம். அந்த விடயங்கள் தெரியாமல் இருந்திருக்கலாம்.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஜனநாயக தன்மையை எப்போதும் கைக்கொண்டவர்கள். அதனால் தான் ஒவ்வொரு கிராம அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.

ஜனநாயகத்திற்கு விரோதமாக விடுதலைப் புலிகள் எந்தக்காலத்திலும் இருக்கவில்லை. தமிழரசு கட்சியில் இருக்கும் சிலர் அந்தக் காலங்களில் இருந்தவர்கள் அல்ல. இடைவெளிகள் இருக்கின்றன.

20 வருட இடைவெளிகள் இருக்கின்றன. தமிழரசு கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் புலிகளுக்கு ஆதரவானவர்கள் அல்ல. உண்மைகள் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் போது சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

ஏனெனில், அந்தக் காலத்தில் இருந்து அதற்குள்ளேயே வாழ்ந்தவன். சவால் விடுக்க முடியாது. கட்சித் தலைவர்கள் கொலை செய்யப்பட்டது நடக்கவில்லை என சொல்லவில்லை. சில கொலைகள் நடந்திருக்கின்றன. அது யதார்த்தம், உண்மை, அதற்குரிய காரணங்கள், காரியங்கள் என்பவற்றை புலிகள் தான் சொல்லியிருக்க வேண்டும். அது எனக்குத் தெரியாது. அமிர்தலிங்கத்தை கொலை செய்தது தவறு என மாத்தையா போன்றவர்களுக்கு சொன்னவன் நான். ராஜிவ் காந்தியை கொலை செய்தது தவறு என சொன்னவன் நான். சிலதவறுகள் நடந்திருக்கின்றன.

அவை இல்லை என மறுப்பதற்கு இல்லை. மக்கள் புரிந்துகொள்வார்கள். சிலரைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் தற்போதுதான் அரசியலுக்கு வருகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.