சிவநகர் பகுதியில் கிணறுகள் துப்பரவுப்பணி!

கடந்த மாதம் வன்னியில் ஏற்பட்ட திடீர் மழை ற்றும்
வெள்ளப்பெருக்கினால்குடிநீர் கிணறுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
அவ்வாறு வெள்ளநீர் புகுந்த கிணறுகளை இறைத்து சுத்தம் செய்யும் பணி இன்று உருத்திரபுரம் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்திற்காக ஒருதொகுதி நீரிறைக்கும் இயந்திரம் நீர்க்குழாய் உள்ளிட்ட உபகரணங்கள் ஜேர்மனி பேர்ளினிலுள்ள அம்மா உணவகத்தின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்டது.

மேலுமொரு நீரிறைக்கும் இயந்திர தொகுதி அவுஸ்திரேலிய தமிழ் மக்களின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டது அத்துடன் துப்பரவுப் பணிக்கான ஏனைய செலவுகளுக்கான அவுஸ்ரேலிய நிதிப் பங்களிப்புடன் துப்பரவுப் பணிகள் இன்று சிவநகர் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.