தமிழ்த்தேசத்தின் அங்கீகாரத்துக்காகத் தொடர்ந்து போராட வேண்டும்!

தமிழர்களுக்கு ஓர் அடையாளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னின்று செயற்பட்டவர்களில் மாமனிதர் குமார் பொன்னம்பலமும் ஒருவர்.


இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முண்ணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.

வவுனியா கனராயன்குளத்தில் இன்று நடைபெற்ற குமார் பொன்னம்பலத்தின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது,

தமிழ்த்தேசத்தின் அங்கீகாரத்துக்காகத் தொடர்ந்து போராட வேண்டியதுடன், அதற்காக எமது உயிர் மூச்சுள்ளவரை நேர்மையாகவும், அர்ப்பணிப்பாகவும் பயணிக்க வேண்டும்.

செல்வந்தர் குடுப்பத்தைச் சேர்ந்த பிரபலமான சட்டத்தரணியான குமார் பொன்னம்பலம், வசதி வாய்புக்கள் எவ்வளவோ இருந்தும் கூட எமது மண்ணை உயிருக்குயிராக நேசித்து ஈழத்தமிழர்களிற்காக தன்னை அர்ப்பணித்து உழைத்திருந்தார்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தமிழ் தேசத்தின் அங்கீகாரத்தை வேண்டி நகர்ந்த வேளையிலே அந்தப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை ஏற்றுக் கொண்டார்.

அதன் நியாயங்களை சர்வதேச அரங்கு வரை எடுத்துச் சென்று அதற்கு அங்கீகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்ற இலட்சிய வெறியோடு உலகின் பல நாடுகளுக்கும் படி ஏறி சர்வதேச மனித உரிமை அமைப்புகளையும்,இராஜதந்திரிகளையும் தேடிச் சென்று சந்தித்து இல்ங்கை அரசின் பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தெரியபடுத்துவதில் மிகவும் பங்காற்றியவர்.

ராணுவத்தால் படுகொலை செய்யபட்ட மாணவியான கிரிசாந்தி தொடர்பான தகவல்களை வெளிஉலகிற்கு கொண்டு சென்று செம்மணிப் புதைகுழியைத் தோண்டி சந்திரிகா அம்மையார் சமாதான வேடம் போட்டு புரிந்த இனபடுகொலை சம்பவங்களையும் அவரது கொலை முகத்தையும். அம்பலப்படுத்தியதில் இவரது பங்கு அளப்பரியது.

அவரது ஐனநாயக வாதங்களை ஏற்றுக்கொள்ளாத சந்திரிகா அரசு அவரை படுகொலை செய்தது.

அவரது தியாகத்துக்கு மதிப்பளித்து தேசியத் தலைவர் மாமனிதர் என்ற அதிஉயர் கௌரவத்தை வழங்கியிருந்தார். அவர் எந்த இலட்சியத்திற்காக உயிர் திறந்தாரோ அந்த அடிப்படையில் வடகிழக்கு இணைந்ததாயகத்திலே சுயநிர்ணய அடிப்படையிலே எங்களிற்கான அரசியல் தீர்வைப் பெறுவதற்காக தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
ஒற்றையாட்சியை நாம் நிராகரிக்க வேண்டும், ஏக்கிய ராட்சியை நாம் நிராகரிக்க வேண்டும். பௌத்தம் அரச மதம் என்பதை நாம் நிராகரிக்க வேண்டும்.எமது தேசத்தின் அங்கீகாரத்துக்காகத் தொடர்ந்து போராட வேண்டும். என்றார்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.