'புலனாய்வுதுறையே' ஒரு நாட்டின் முதுகெலும்பு என நிருபித்த கேணல் சாள்ஸ்!

ஒரு நாடு கட்டுக் கோப்பாடு இருக்க. நிழலாக நின்று அதையும் கடந்து அவர்களையும் வழிநடத்துபவர்களாக 'வேவு'படையாக மொத்தத்தில் அனைத்துமாக திகழ்வதே 'புலனாய்வு துறையினர்.


 'புலனாய்வுதுறையே' ஒரு நாட்டின் முதுகெலும்பு ஆகும்.' புலனாய்வுதுறையின்' அவசியம் எவ்வளவே ஆபத்தும் அதிகம். மக்களோடு மக்களாய் கலந்து உறவாடும் ஒரு முக.ம் காரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் கண்காணிப்பு வேலையில் இமையளவும்  பிசகிவிட கூடாது என்பதில் கவணமும் மறுமுகமும் என உலாவுவது பயங்கரமானது.

2005 ம் ஆண்டு சித்திரை மாதம் படையப்புலனாய்வுப்பிரிவை பொறுப்போற்ற சாள்ஸ் அவர்கள் அப்பிரிவைத் தாக்குதல் ரீதியாகவும், புலனாய்வு ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் மிகவும் நேர்த்தியாக கட்டிவளர்த்தார். தனது நீண்டகால புலனாய்வு அனுபவங்களை ஒவ்வொரு போராளிக்களுக்கும் தெளிவாக புரியவைத்து சிறந்த போராளிகளாக வளத்தெடுத்தார். ஒரு புலனாய்வுப் பிரிவுக்குள் என்னென்ன கட்டமைப்பு இருக்குமோ அத்தனை கட்டமைப்புகளையும் உருவாக்கி அனைத்துப் பணிகளையும் தானே நேரில் வழிநடத்தி நெறிப்படுத்தினார்.

தன்னுடைய அனைத்து அனுபவங்களையும் சம்பவங்கள் ஆக்கி அனைவருக்கும் எளிதாகப் புரியவைத்து கடமைகளை இலகுவாக்கிய வீரன் சாள்ஸ். மிகக் குறுகிய காலப்பகுதியில் தேசியத்தலைவரின் நெறிப்படுத்தலின் கீழ் சரியான வழியில் படையப்புலனாய்வு பிரிவை கட்டியமைத்த சாள்ஸ் 01-01-2008 அன்று தன் வழிநடத்தலின் கீழ் பணிபுரியும் அனைத்துப் போராளிகளையும் ஒன்று கூட்டி "இந்த ஆண்டை எமது பிரிவின் நடவடிக்கை ஆண்டாக நான் பிரகடணப்படுத்துகிறேன். இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் உங்களுக்கு எல்லா வழிகளிலும் சரியான முறையில் பயிற்சி அளித்துள்ளேன்.

இந்த வருடத்தில் இருந்து நாம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் தேசியத்தலைவர் எம்மிடம் நிறைய எதிர்பார்க்கின்றார். அண்ணை எங்களிடத்தில் எதிர்பார்ப்பதை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்"...எனக் கூறி அனைவரும் செய்ய வேண்டிய பணிகளை தெளிவு படுத்தினார்.அனைத்து அணித்தலைவர்களுக்கும் வேலைத் திட்டங்களை பகிர்ந்தளித்தார்.

திட்டமிட்ட செயற்பாட்டைத் தீவிரப்படுத்த கேணல் சாள்ஸ் 04-01-2008 அன்று மன்னாருக்குச் சென்றார். அங்கிருந்து கொண்டு செய்ய வேண்டிய சில இரகசியப் வேலை திட்டங்களை நெறிப்படுத்தி விட்டு. மன்னார் முன்னணிக்காவலரிணில் லெப்.கேணல் மங்களேஸ் உடன் நின்ற படையப்புலனாய்வு போராளிகள் அனைவருடனும் உரையாடினார்.

அன்று இரவு அவர்களிடத்திலேயே தங்கி, அவர்களின் செய்ய வேண்டிய பணிகளை நேரில் பார்த்து ஒழுங்கமைத்து விட்டு.05-01-2008 அன்று அதிகாலை வேளை ஒரு பணிக்காக மூண்று போராளிகளுடன் முகாம் நோக்கி புறப்பட்டுக் கொண்டிருந்த வேளை மன்னார் மாவட்டம் "பள்ளமடுப்பகுதியில்" சிறிலங்காப்படைகளின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் கேணல் சாள்ஸ் அண்ணா உட்பட. லெப்.வீரமாறன்  லெப்.காவலன் லெப்.சுகந்தன்  ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

புலனாய்வுத்துறையின் முதுகெலும்பாக திகழ்ந்து பல வெற்றிகளின் வேராகவும் செயற்பட்ட கேணல் சாள்ஸ் அவர்களைப் பற்றி தெரியாதவர்கள் பலர் இருந்தாலும்.அந்த சாதனை வீரனைப்பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

உலகத்தையே வியக்க வைத்து. உச்சகட்ட சாதனைகள் புரிந்து தேசியத்தலைவர் மனதிலும், மக்களிடத்திலும், போராளிகளிடத்திலும்  தனி இடத்தை பிடித்த ஓர் அற்புத தளபதி தான் கேணல் சாள்ஸ். இவரின் சாதனைகளையும், வீரத்தையும், தியாகத்தையும் அறிந்தவர்களால் நிச்சியமாக இவரை ஒரு சாதரண வீரனாகப் பார்க்க முடியாது.  இவரின் செயல்கள் ஒவ்வொன்றும் வியப்பையே அளிக்கும். கடமை நேரத்தில் மிக மிக கண்டிப்புடன் காணப்படும் கேணல் சாள்ஸ் மற்றைய நேரங்களில் புதிதாக இணைந்த போராளிகளுடன் கூட தோளுடன் கைபோட்டு சக தோழன் போல் ஒவ்வொருவர் உணர்வுகளையும் புரிந்து கொண்டு அவர்களை ஊக்கிவித்து உற்சாகமாக வைத்திருப்பார்.

யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் சாள்ஸ்.

சிறிய வயதில் தன்னுடைய போரியல் வாழ்கையை தொடங்கியபோது அவரின் தோற்றமும் வயதும் போதாத காரணத்தால் வடமராட்சியில் போர் நெருக்கடி காரணமாக மக்களுக்கு கிடைக்கக்கூடிய பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் தளபதி கிட்டண்ணாவினால் தெரிவு செய்யப்பட்டிருந்த நியாய விலைக்கடையில் பொருள் விற்பனையாளராக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார்.

பின்னர் வடமராட்சியில் “ஒப்பரேசன் லிபரேசன்” நடவடிக்கையைச் சந்தித்த போது பருத்தித்துறை களமுனையில் இறுதிவரை நின்று போராடி பிற்பாடு விலகி மீண்டும் மில்லரின் புதிய சகாப்தத்துடன் உள்நுழைந்து சாதனை படைத்தார்.

இந்திய இராணுவம் முழுமையாக யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்து எல்லா இடங்களிலும் திரிந்துகொண்டிருந்த நேரம், தங்க இடமின்றி- உணவின்றி- இருப்பிடமின்றி அலைந்து திரிந்த வேளையில் பருத்தித்துறைப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த கப்டன் மொறிசின் தலைமையின் கீழ இந்தியப் படைக்கு எதிராக தாக்குதல்களை தொடுத்து, இந்திய இராணுவத்தின் நடவடிக்கைக்கு முகம் கொடுத்து, பின்னர் அங்கிருந்து மணலாற்றுக்கு வந்தார் சாள்ஸ். அங்கு மீண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களுடன் யாழ். குடாநாட்டுக்குச் சென்று பணியைத் தொடர்ந்தவர்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியப்படை வெளியேறிய பின்னர் அன்று தொடக்கம் வடமராட்சியினை தளமாகக் கொண்டு செயற்பட்ட சாள்சின் செயற்பாடு கண்டு- புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களால் அடையாளம் காணப்பட்டு- தெற்கில் தளம் அமைப்பதற்காகவும், அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முகம் தெரியாத புலியாகச் சென்றார்.

 புலனாய்வுப்பிரிவிலேயே நீண்ட காலம் பணிபுரிந்த வீரன் சாள்ஸ். பிரதான புலனாய்வு, கரும்புலித்தாக்குதல்களை வழிநடத்திய பெரும் சாதனையாளனாகவே வாழ்ந்தார். வெளியில் சொல்ல முடியாத, இதுவரை சொல்லப்படாத பல தாக்குதல்களை முன்நின்று வழிநடத்தி  சிறீலாங்கா அரசையே திணறவைத்த, உலகத்தையே உற்று நோக்க வைத்த "கட்டு நாயக்கா" வெற்றி தாக்குதலையும் சாள்ஸ் அண்ணா அவர்களே வழிநடத்தி  நெறிப்படுத்தினார்.

இன்னும் எத்தனை எத்தனையோ சாதனைகளை புரிந்து நீண்ட கால தாக்குதல் புலனாய்வாளனாக செயற்பட்ட இவரது செயற்பாடுகள் ஒவ்வொன்றும் மிகவும் இரகசியமானதாகவே இருந்தது. ஒரு புலனாய்வாளனுக்கு இருக்க வேண்டிய முக்கிய தகுதி அவன் யார் என்று இறுதி வரை யாருக்குமே தெரியக் கூடாது. அந்தத் தகுதியை தனதாக்கிய பெருந் தளபதி கேணல் சாள்ஸ்.

எந்த சூழ்நிலையிலும் எந்தக் கடமை என்றாலும் செய்யக்கூடிய மனவலிமை இவரிடம் இருந்தது. ஒரு கரும்புலித் தாக்குதலுக்கு திட்டமிட்டு தயார்படுத்தி அனுப்பிய ஒரு போராளி இலக்கை அண்மித்த இறுதி நேரத்தில் அப்பணியைச் செய்ய தயங்கிய போது சாள்ஸ் அவர்கள் தானே அந்த தாக்குதலை செய்ய வெடிமருந்து நிரப்பட்ட வாகனத்தில் ஏறி வாகனத்தை இயக்கிக்கொண்டிருந்த வேளை அவருடன் கூட நின்ற இன்னொரு போராளி "நீங்கள் இந்த இலக்குக்கு போக கூடாது, நீங்கள் நிறைய தாக்குதல்களை வழிநடத்த வேண்டும்"என்று கூறி வாகனத்தில் இருந்த சாள்ஸ் அவர்களை கீழே தள்ளிவிட்டு தானே அந்த இலக்கை தகர்த்தான். தென் இலங்கையில் மக்களோடு மக்களாக சாள்ஸ் அவர்கள் வாழ்ந்த காலங்களே அதிகம்.

No comments

Powered by Blogger.