இலங்கையில் புதியவகை கடவுச்சீட்டு

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இந்த வருடத்தில் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டை அச்சிடுவதற்கான கேள்வி மனு தற்போது கோரப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஆறு மாத காலப்பகுதிகுள் புதிய கடவுச்சீட்டு விநியோகம் நடைமுறைக்கு வரும்.
கடந்த வருடத்தில் ஐந்து இலட்சம் கடவுச்சீட்டுகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் விநியோகித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு கடந்த மாதம் 31ம் திகதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை இந்தியா மற்றும் நேபாளத்திற்கு யாத்திரைகளுக்காக செல்வதற்காக வழங்கப்படும் கடவுச்சீட்டு வழமை போன்று விநியோகிக்கப்பட்டு வருவதாக கட்டுபாட்டு ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.