மட்டக்களப்பு மாவட்ட தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் கருத்தரங்கு

‘தற்காலத்தில் மருந்தகங்களின் செயற்பாடுகள்’ எனும் தலைப்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மட்டக்களப்பில் இடம்பெற்றது.


குறித்த கருத்தரங்கு மாவட்ட தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் வீ. இரமநாதன் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையும் மட்டக்களப்பு மாவட்ட தனியார் மருந்தக உரிமையாளர் சங்கமும் இணைந்து இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிறேஸி நவரெட்ணராஜா, தொற்றா நோய்த் தடுப்பு வைத்திய அதிகாரி ஆர். நவலோஜிதன், தாய் சேய் நல வைத்திய அதிகாரி எம். அச்சுதன், பிராந்திய தொற்று நோய் வைத்திய அதிகாரி தர்ஷினி காந்தரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு, வாழைச்சேனை, காத்தான்குடி, களுவாஞ்சிகுடி, ஏறாவூர் போன்ற இடங்களிலுள்ள சிறந்த மருந்தக உரிமையாளர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.