ரணிலைப் போன்று -சம்­பந்­த­னுக்­கும் பதவி ஆசை- மகிந்த!!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் ­பின் பேச்­சா­ளர் சுமந்­தி­ர­ னின் கதையை நம்பி நாடா­ளு­மன்­றத்­தின் சம்­பி­ர­தா­யத்­தை­யும், சபா­நா­ய­க­ரை­யும் அவ­ம­தித்­துப் பேசும் சம்­பந்­தன், நாளைக்குநீதி கோரி உயர்­நீ­தி­மன்­றம் செல்­ல­வும் கூடும். ரணில் விக்­கி­ர­ம­சிங்க மாதிரி பதவி ஆசை பிடித்த பட்­டி­ய­லில் சம்­பந்­த­னும் இணைந்­துள்­ளார்.


ரணி­லின் பாணி­யில் சம்­பந்­த­னும் எனது பத­விக்கு எதி­ராகச் சட்ட நட­வ­டிக்கை எடுத்­தால் அதை எதிர்­கொள்­ளத் தயா­ராக இருக்­கின்­றேன். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

‘எதிர்க்­கட்­சித் தலை­வர் பதவி தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­டம் இருந்து பறிக்­கப்­பட்டு அர­சின் ஓர் அங்­க­மான ஐக்­கிய மக்­கள் சுதந்­தி­ரக் கூட்­ட­மைப்­பின் உறுப்­பி­னர் மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டமை அநீ­தி­யான செயற்­பாடு. எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் இருப்­ப­தற்கு மகிந்த தகு­தி­யற்­ற­வர். இந்த விட­யத்­தில் சபா­நா­ய­கர் தவ­றி­ழைத்­துள்­ளார்’ என்று நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­று­முன்­தி­னம் அறிக்­கை­யொன்­றைச் சமர்ப்­பித்து உரை­யாற்­றிய கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன் குற்­றம்­சாட்­டி­யி­ருந்­தார்.

சம்­பந்­த­னின் உரை தொடர்­பி­லேயே மகிந்த ராஜ­பக்ச மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வியை நான் கேட்டு வாங்­க­வில்லை. சம்­பந்­தன் மாதிரி பதவி ஆசை எனக்­கில்லை. ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பரிந்­து­ரை­யின் பிர­கா­ரம் நாடா­ளு­மன்­றத்­தின் சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கு அமைய எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வியை சபா­நா­ய­கர் எனக்கு வழங்­கி­னார்.
ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன அரச தலை­வ­ரா­க­வும், அமைச்­ச­ர­வை­யின் தலை­வ­ரா­க­வும் இருக்­கின்ற போதி­லும் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் ஏனைய உறுப்­பி­னர்­கள் எதிர்க்­கட்சி வரி­சை­யில்­தான் அமர்ந்­தி­ருக்­கின்­றார்­கள்.

கடந்த வரு­டம் இறு­தி­யில் கூட்டு அர­சி­லி­ருந்து ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி வில­கி­விட்­டது. நாடா­ளு­மன்ற விதி­மு­றை­க­ளுக்கு அமைய ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி தற்­போது பிர­தான எதிர்க்­கட்­சி­யா­கும். இதில் மாற்­றுக் கருத்­துக்­க­ளுக்கு இட­மில்லை.

முன்­னாள் அரச தலை­வர்­க­ளான டி.பி.விஜே­துங்க, சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க ஆகி­யோ­ரின் ஆட்­சிக் காலங்­க­ளி­லும் அரச தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் ஒரே கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­துள்­ள­னர் என்று சம்­பந்­த­னின் உரைக்கு சபா­நா­ய­கர் நல்ல விளக்­கம் கொடுத்­துள்­ளார் -– என்­றார்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.