கிளிநொச்சி மலயாளபுரம் பகுதியில் பெரும் சோகம்!

கிளிநொச்சி மலயாளபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து எட்டுஅகவை சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. அண்மைக்காலத்தில் பெய்த கடும் மழையினால் கிணறுகளின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இன்னிலையில் மலையாளபுரம் பகுதியில் வசித்துவரும் சிறுமி அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் தவறுதலாக வீழ்ந்துள்ளது.
அயலவர்களின் உதவியுடன் சிறுமியின் உடலம் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டுசெல்லப்பட்டு அங்கு உடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

No comments

Powered by Blogger.