பரிஸில் வாகனங்களுக்கு தீ மூட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!

‘யெலோ வெஸ்ட்’ எனப்படும் மஞ்சள்நிற அங்கி அணிந்தவர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ மூட்டுவது போன்ற காணொளிகள் வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


பிரான்ஸில் எரிபொருள் விலையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தால், ‘யெலோ வெஸ்ட்’ என்ற அமைப்பினர் கடந்த சனிக்கிழமை எட்டாவது வாரமாக மீண்டும் பரிஸில் போராட்டம் நடத்தினர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ மூட்டுவது போன்ற காணொளிகள் வெளியாகியுள்ளன.

இதன்காரணமாக பரிஸின் சில பகுதிகள் தீ மூட்டமாக காட்சியளித்துள்ளன. அத்துடன், ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இரண்டு பொலிஸார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் இனங்காணப்படுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colomboNo comments

Powered by Blogger.