மக்களை பாதிக்காத சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது

நாட்டு மக்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதென அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெறும் யுத்தத்தின்போது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சிரியாவில் இதனை பயன்படுத்துகின்றனர்.

எமது நாட்டில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்களில் பேசி சமாதானத்தை நிலைநாட்ட உறுப்பினர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

கொத்துக்குண்டுகளை தடைசெய்த நாடுகள் பட்டியலில் இலங்கை உள்ளது. அதன்படியே 2018 மார்ச்சில் இலங்கை குறித்த உடன்படிக்கையில் இறுதியாக கைச்சாத்திட்டது.

கொத்துக் குண்டுளையோ, இரசாயன குண்டுகளையோ பயன்படுத்தி, மனித படுகொலைகளை மேற்கொள்வதற்கு நாடுகளுக்கோ இராணுவ வீரர்களுக்கோ இல்லை. எனவே இவ்வாறு இருக்கின்ற உரிமையை அகற்றுவது தொடர்பிலேயே நாம் இன்று விவாதிக்கின்றோம்.

அந்தவகையில் மக்களுக்கு தீங்கு ஏற்படாத வகையில் சாதகமாக இருக்கும் சட்டத்தை நிறைவேற்றவே அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு கருதியே பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு கீழ் வைத்துள்ளார். அதற்கு எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

மேலும் எந்த காலத்திலும் எங்கேயும் எப்போதும் கொத்துக்குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகளை பாவிக்கக் கூடாது என்பதே எனது நிலைப்பாடு” என கூறினார்.
,#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.