ஒரு ஆசானின் உள்ளத்திலிருந்து "போகாதீங்க சார் ப்ளீஸ்"

நூல் வெளியீட்டு விழா


12.01.19-சனிக்கிழமை மாலை 4 மணி.
சென்னைப் புத்தகக் கண்காட்சி.
சிற்றரங்கம். YMCA மைதானம்.நந்தனம்.

நண்பர்களுக்கு வணக்கம். விசித்திரங்களைப் படைக்கும் வல்லமை காலத்திற்கு உண்டு. எதையாவது பதிவேற்றம் அல்லது பதிவிறக்கம் செய்துகொண்டே இருக்கும். நிகழும் அனைத்திற்கும் காலமே பொறுப்பு. காலம் தன்னை பதிய விரும்பி, அதற்காக என்னைப் பயன்படுத்திக்கொண்டது.

கொண்டாடப்பட்ட பகவான் ஆசிரியராகிய நான், எந்த ஆசிரியரும் செய்யப்படாத எதையும் கற்பித்தலில் புதியதாய் செய்துவிடவில்லை. பல ஆசிரியர்கள் செய்ததை, பல ஆசிரியர்கள் செய்துகொண்டிருப்பதைத் தான் செய்கிறேன். அவர்களின் சார்பில் இதைப் பதிவு செய்துகொள்கிறேன்.ஆசிரியர் மாணவர்கள் இடையிலான
அந்தக் கற்றல் கற்பித்தல் அனுபவத்தை, இடைவினையை எந்தவித புனைவுமின்றி "போகாதீங்க சார் ப்ளீஸ்" தொகுப்பில் பதிவு செய்திருக்கிறேன். எங்கோ ஒரு சாமானியன் அல்லது ஓர் ஆசிரியர் வாசித்துவிட்டு கண்ணீர்விட்டாலோ, சிரித்தாலோ, நெகிழ்ந்தாலோ, அல்லது நினைவுகூர்ந்தாலோ அதுவே இந்நூலின் வெகுமதி.

என்மீது அன்புகாட்டிய மாணவர்களுக்கு கற்பித்தல் தாண்டி என்ன செய்யப்போகிறேன் என்றிருந்த மனநிலையில் இப்போதைக்கு இந்நூலைக் காணிக்கையாக்குகிறேன்.

நூல் வெளியாக உறுதுணையாக இருந்த கவிஞர். திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களுக்கும், உயிர்மை பதிப்பகத்தாருக்கும் மற்றும் எழுதத் தூண்டிய நண்பர்களுக்கும் ப்ரியத்தின் நன்றிகள்.

அனைவரையும் எதிர்பார்த்து விழாநாளில் காத்திருப்பேன். அனைவரும் வாங்க.நன்றி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.