தேவாலயத்தில் ஆயுதத்துடன் தோன்றி சர்ச்சை!

உலகின் முக்கிய அரசத்தலைவர்களை போன்ற தோற்றமுடையவர்கள் அவ்வப்போது மக்கள் மத்தியில் தோன்றி பெரும் பரபரப்பினை ஏற்படுத்துகின்றனர்.

அவ்வாறானதொரு விநோத சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டார்ட்டேயின் (Rodrigo Duterte) தோற்றத்தைக் கொண்ட ஒருவர் ஹாங் கொங் தேவாலயத்திற்குள் அண்மையில் நுழைந்து பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார்.

ஹொங்கொங்கில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் மக்களிடையே பிரபலமான குறித்த தேவாலயத்திற்குள் அவர் நுழைந்ததும் குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது.

ஆலயத்தில் பிரார்த்தனைக்காக வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களின் கவனம் அவர் பக்கமாய்த் திரும்பியது.

அவரின் மேடைப்பெயர் Cresencio Extreme என கூறப்படுகின்றது. அவருடன், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்-னைப்போன்று தோற்றம் கொண்ட ஹாவர்ட் எக்ஸும் (Howard X) அங்கு சென்றிருந்தார்.

இதன்போது குறித்த இருவருடனும் அங்கிருந்தவர்கள் ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

No comments

Powered by Blogger.