சிறீதரனின் வலதுகைகளில் ஒருவரான சுப்பையாவின் சுதந்திரதினம்!!

கிளிநொச்சி கரைச்சி சபையின் தமிழரசுகட்சி உறுப்பினர் கோணாவில் வட்டார சுப்பையா.இவர் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வலதுகைகளில் ஒருவர்.
சிறீலங்காவின் சுதந்திரதினமான இன்று கிளிநொச்சி சுப்பையா இதை கொண்டாடிய விதம் ஊடங்கங்களில் பரவியுள்ளது.சிறீலங்காவில் சுதந்திர தினத்தை கரிநாளாக கருதி வடக்குகிழக்கில் தமிழர்கள் அனுட்டிக்கும் இன்றைய நாளில் காலைமுதலாவதாக கிளிநொச்சி கச்சேரியில் சிங்கக்கொடி ஏற்றி கொண்டாடப்பட்ட சிறீலங்காவின் சுதந்திரதினத்தில் கலந்துகொண்டு மகிழ்வித்தார்.

அடுத்து கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்பாக மக்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்புக்கொடி போராட்டத்தில் கலந்துகொண்டு துக்கமே வடிவாக நின்றார்.சுப்பையாவால் மட்டும் எப்படி இன்றைய நாளில்சில மணி இடைவெளிக்குள் அதுவும் ஒரு இடத்தில் முகத்தை மாற்ற முடிந்தது என பலரும் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

சுப்பையாவின் வரலாற்றில் இவ்வாறான கொள்கை வரலாறு இதுவே முதல் தடவையும் அல்ல 2011ம் ஆண்டும் உள்ளுராட்சி சபை தேர்தல் காலத்தில் நாமல்ராஜபக்சவுடன் கைலுக்கி மகிழ்ந்துவிட்டு பின் உடனடியாக தமிழரசுக்கட்சியில் சிறீதரனின் சிபார்சில் தேர்தலில் நின்று கரைச்சிப்பிரதேச உறுப்பினர் ஆனவர்இவ்வாறான ஒருவருக்கு சிறீதரன் 2018லும் ஆசனம் வழங்கி போட்டியிட வைத்து சுப்பையாவின் இருமுகக்கொள்கையை வளர்த்தெடுத்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரணில் அரசாங்கத்தின் சகலவிதமான கொள்கைகளுக்கு கைகளை உயர்த்தியும் கையெழுத்து வைத்தும் சிறீலங்கன ஜனநாயகத்தை மீட்க போராடிய சிறீதரனும் இன்று அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியிருப்பதும் கிளிநொச்சி தமிழரசுக்கட்சி இருமுகக்கொள்கை ஒன்றை மேல்மட்டம் தொடக்கம் அடிமட்ட தொண்டர் வரை பின்பற்றி வருவது தெளிவாகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.