தமிழ் மக்களின் குரலை சொந்த குரலில் கேட்பதாக வடக்கு ஆளுநர்உருக்கம்!!

வடக்கு தமிழ் மக்­க­ளின் அழுகை மற்­றும் வேண்­டு­கோளை அவர்­க­ளது சொந்த மொழி­யில் என்­னால் கேட்க முடி­யும். இவ்­வாறு வடக்கு மாகாண ஆளு­நர் கலா­நிதி சுரேன் ராக­வன் தெரி­வித்­துள்­ளார்.

கொழும்பு ஆங்­கில ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகா­ணத்­தின் 32 வருட வர­லாற்­றில் நிய­மிக்­கப்­பட்ட முத­லா­வது தமிழ் மொழி ஆளு­நர் நான். அத­னால், தமிழ் மக்­க­ளின் அழு­கு­ரலை எனது சொந்­தக் குர­லில் கேட்­கக்­கூ­டி­ய­வாறு உள்­ளது.

இந்த நிய­ம­னத்­தில் அரச தலை­வ­ரின் ஒரு அர­சி­யல் சமிக்ஞை உள்­ளது என்று நான் நினைக்­கி­றேன்.
இந்­தி­யா­வில் சுமார் ஒரு லட்­சம் இலங்கை அக­தி­களை இருக்­கின்­றார்­கள். அவர்­கள் தாய்­நாட்­டுக்கு திரும்­பு­ வ­தற்­கான உரிமை உண்டு. இங்கு கேள்வி என்­ன­வென்­றால், அவர்­கள் திரும்பி வந்­தால் எங்கே தங்­க­லாம்? அவர்­க­ளுக்கு நிலம் தேவை.

பாது­காப்­புத் தரப்பு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட நிலத்­தின் தனி­யார் மற்­றும் அரச காணி­கள் 90 வீத­மா­னவை விடு­விக்­கப்­பட் டுள்­ளன.விடு­விக்­கப்­பட்ட இந்த நிலங்­க­ளின் உகந்த பயன்­பாட்­டிற்­காக நாம் திட்­ட­மிட வேண்­டும். அத்­தோடு இடம்­பெ­யர்ந்த மக்­களை இங்கு மீள்­கு­டி­யேற்­று­ வ­தற்­கும் முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டும்.

சிலர் இன்­ன­மும் யாழ்ப்­பா­ணத்­தில் முகாம்­க­ளில் வாழ்­கி­றார்­கள். அவர்­கள் மீன­வர்­கள் என்­றால், கட­லுக்கு அரு­கில் நிலங்­க­ளைக் கொண்­டி­ருக்க வேண்­டும்.

ஆனால் சில மூலோ­பாய கார­ணங்­க­ளுக்­காக இரா­ணு­வம் கடற்­க­ரை­யோர நிலத்தை விடு­விக்க முடி­யாது என்­றால், இடம்­பெ­யர்ந்­தோர் மாற்று இடங்­க­ளில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வார்­கள்.இந்­தப் பகு­தி­யில் 65 ஆயி­ரம் வீடு­கள் போரில் சேத­ம­டைந்­துள்­ளன என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளன. அவற்றை மீண்­டும் கட்­டு­வ­தற்­கான முயற்­சி­கள் வெற்­றி­க­ர­மாக இல்லை – என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

No comments

Powered by Blogger.