அர்ஜுன் அலோசியஸிடம் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பதிவு!!

பெர்ப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸிடம் மூன்று மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் அர்ஜுன் அலோசியஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையானார்.
இதன்போது அவரிடம் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக பெர்ப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.