மலையகத்தில் கையெழுத்து வேட்டை!!

சம்பள உயர்வு உள்ளிட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை உள்ளடக்கிய மகஜர் பிரித்தானிய மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்னிறுத்தி மலையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது.
மலையக இளைஞர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. மலையகத்தின் அனைத்து பிரதான நகரங்களிலும், தோட்டங்களிலும் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மக்களின் கையெழுத்துக்களுடனான மகஜர் ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர், இந்திய மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.