சுற்றுலா துறைமுகமாகிறது காலி துறைமுகம்!!

காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய்யுமாறு துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சர் சாகல ரத்னாயக்க நேற்று (செவ்வாய்க்கிழமை) காலி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது காலி துறைமுகத்தை எதிர்காலத்தில் அபிவிருத்திச் செய்வதற்கு அவசியமான துறைமுக வசதிகளை மேம்படுத்துதல், துறைமுகத்தினுள் கட்டிட நிர்மாணப் பணிகளை உரிய முறையில் முன்னெடுத்தல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார்.

காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்திச் செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள காலியை மையமாகக் கொண்டு இத்துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதன் மூலமாக இந்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்த முடிவதுடன், இத்துறைமுகத்தை இலாபமீட்டும் துறைமுகமாகவும் மாற்றியமைக்க இயலுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும், இருநூறு ஆண்டுகளிற்கு மேலான வரலாற்றைக்கொண்ட இத்துறைமுகத்தின் அழகிற்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத வண்ணம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென்றும் அமைச்சர் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியதோடு, துறைமுக உழியர்களுடனும் கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின்போது காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாரச்சி, ஐக்கிய தேசிய கட்சியின் ஹபரதுவ ஆசனத்தின் பிரதான ஏற்பாட்டாளர் சட்டத்தரணி தாரக்க நாணயக்கார மற்றும் அப்பிரதேச அரசியல்வாதிகள், துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.