இந்தியா வட மாகாண கல்வி வளர்ச்சிக்கு உதவி!

போரினால் பாதிக்கப்பட்ட வட. மாகாண மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு உதவியளிப்பதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி பல்கலைக் கழகங்களின் பிரதிநிகளின் தூதுக்குழுவினர் இன்று (புதன்கிழமை) வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை சந்தித்தனர்.
இதன்போது, பின்தங்கிய நிலையிலுள்ள வட. மாகாண கல்வியை மீண்டும் கட்டியெழுப்ப துணை புரியுமாறு இந்திய தூதுக்குழுவிடம், ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆளுநரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட இந்திய பிரதிநிதிகள், வட மாகாண கல்வி வளர்ச்சிக்கு தம்மால் முடிந்த உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக குறிப்பிட்டனர்.
இதேவேளை, இலங்கை- இந்திய பல்கலைக்கழக பீடங்களுக்கிடையில் மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் ஆளுநர் அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
அதன்படி, இவ்விடயம் தொடர்பாக இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளக்கூடிய சாத்தியமான வழிமுறைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Hea
dlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.