கடலூர் நகராட்சியைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு!!

கடலூர் முதுநகரில், வாடகையை உயர்த்திய நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்த 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடையடைப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கடைகளை சீல்வைக்க வந்த நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடலூர் முதுநகர்  பகுதியில் ஆங்கிலேயர் காலத்திலிருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் பக்தவச்சலம் மார்க்கெட்  உள்ளது. இங்கு,  200-க்கும் மேற்பட்ட  கடைகள் உள்ளது.

இந்தக் கடைகளுக்கு, கடலூர் நகராட்சி நிர்வாகம் எந்த அடிப்படை வசதியும் செய்துகொடுக்காமல்  சுமார் 10 மடங்கு வாடகை மட்டும் உயர்த்தியுள்ளது. அதாவது,  ரூ500 ஆக  இருந்த வாடகையை ரூ5 ஆயிரமாக  உயர்த்தியுள்ளது. இந்த வாடகையை ஜிஎஸ்டி-யுடன் ஒரு வருடத்திற்கு முன் பணமாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும்,  12-ம் தேதிக்குள்  வாடகை கட்டவில்லை என்றால் சீல் வைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.  இதைக் கண்டித்து, இன்று  200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை அடைத்துவிட்டு  அதே பகுதியில் சாலை ஓரமாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், வாடகை கட்டாத கடைகளுக்கு  சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் வந்து கடைக்கு பூட்டு போட்ட
போது, வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடந்து, அதிகாரிகள் கடைசியில் சீல்
வைக்காமல் திரும்பிச் சென்றனர். இதனால் கடலூர்  முதுநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.   இந்த நிலையில், வரும் 21-ம் தேதி
வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என்று நகராட்சி  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.