``தமிழ் சீரியல் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது ஒரு கிஃப்ட் - `திருமணம்' ஸ்ரேயா ஆஞ்சன்!!

```தமிழ் சீரியல் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது ஒரு கிஃப்ட்டாகத்தான் பார்க்கிறேன். தமிழர்கள் சார்ந்த நிறைய விஷயங்களை கத்துக்க முடியுது.
தமிழர்கள் சின்ன விஷயத்தையும் உணர்வுகளால் நிரப்புவதை உணர முடிகிறது."

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் ``திருமணம்" சீரியலில் பக்கா தமிழ்ப்பெண்ணாக எல்லோருடை மனதையும் கவர்ந்தவர் ஷ்ரேயா ஆஞ்சன். மங்களூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர் துளு மற்றும் கன்னட சீரியல்களில் தன் மீடியா என்ட்ரியைத் தொடங்கி இப்போது `திருமணம் ஜனனி'யாகத் தமிழர்களின் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார். கொஞ்சும் தமிழில் தன்னுடைய பர்சனல் தகவல்களைப் பகிர்கிறார் ஷ்ரேயா.

``எனக்குச் சொந்த ஊர் மங்களூர். படிச்சது பி.காம்.காலேஜ் படிக்கும் போதே மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். மாடலிங் மூலமா கன்னட திரைப்படமான `ஒண்டு முட்டை கதே' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அந்தத் திரைப்படம் அடுத்தடுத்த தளங்களை உருவாக்கிக் கொடுத்துச்சு. எனக்கு டான்ஸ்னா பயங்கர கிரேஸ். ஆனா என் அம்மாக்கு நடிப்புதான் பிடிக்கும்.. அம்மாக்காக ஸ்கூல் ஆண்டு விழாவில் என்னுடைய அஞ்சு வயசில் நடிக்க ஆரம்பிச்சேன். இப்போ நடிப்பு எனக்கான கரியராக மாறிருச்சு'' என்றவர் கண்கள் சுருங்க ``நான் தமிழ் நல்லா பேசுறேனா?" எனச் சிரித்துக்கொண்டே கேட்கிறார்.

``தமிழ் சீரியலுக்கு வந்த புதிதில் சுத்தமா தமிழ் தெரியாது, டயலாக்கை இங்லீஷில் கேட்டு அதுக்கு தகுந்த மாதிரி ஃபேஸ் எக்ஸ்பிரஷன் கொடுத்துருவேன். ஆனால் டயலாக் சொல்ல படாத பாடுபட வேண்டியிருக்கும். நான் டயலாக் பேசி முடிச்சா, எல்லாரும் என்னை கலாய்ச்சு சிரிச்சுட்டு இருப்பாங்க. ஆனால், அடுத்தடுத்த எபிசோடுகள் வர தமிழ் நல்லாவே புரிய ஆரம்பிச்சுது. இப்போ நானும் தமிழ் நல்லா பேச ஆரம்பிச்சுட்டேன்.

உண்மையைச் சொல்லணும்னா தமிழ் சீரியல் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது ஒரு கிஃப்ட்டாகத்தான் பார்க்கிறேன். தமிழர்கள் சார்ந்த நிறைய விஷயங்களை கத்துக்க முடியுது. தமிழர்கள் சின்ன விஷயத்தையும் உணர்வுகளால் நிரப்புவதை உணர முடிகிறது. சமீபத்தில் சீரியலில் பொங்கல் கொண்டாடக் காரைக்குடி போயிருந்தோம். அங்க வீடுகளைப் பார்த்து அப்படியே மெய் சிலிர்த்து போயிட்டேன். வெள்ளைக்காரன் காலத்தில் கட்டுனது போல நேர்த்தியான வடிவமைப்பு கொண்ட வீடுகளைப் பார்த்து அப்படியே ஷாக் ஆயிட்டேன். இயற்கையான காத்து, அருமையான சாப்பாடு, அன்பான மக்கள் என ரொம்பவே என்ஜாய் பண்ணேன். காரைக்குடியில் ஷூட்டிங் நடந்த ஒரு வாரமும் அங்க இருந்த மக்கள் என்னை அவங்க வீட்டுப் பொண்ணாகப் பார்த்த போதுதான், இந்த சீரியல் மூலமாக எனக்குச் கிடைத்த வரவேற்பை உணரமுடிந்தது'' என்றவர் தன் ஆடைத்தேர்வு குறித்த தகவல்களைப் பகிர்கிறார்.

நான் மாடலிங் பண்ணிட்டு இருந்ததால், வெஸ்டர்ன் டிரஸ்கள், வெஸ்டர்ன் டைப் மேக்கப்கள்,மூக்குத்திகள் என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட். ஆனால் சீரியலில் சாரீஸ்தான் என் காஸ்டியூம் என்றதும் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. புடவையை ஹேண்டில் பண்ண ரொம்பவே கஷ்டப்பட்டேன். சேலை செலெக்ட் பண்ணுவதிலும் சிரமப்பட்டேன். அதன் பின் டைரக்டரே சீனுக்கு தகுந்த மாதிரியான புடவைகளை என்னுடன் வந்து தேர்வு செய்து கொடுத்தாங்க. எனக்கு எந்த மாதிரியான புடவைகள் நல்லா இருக்கும் எனப் புரிய ஆரம்பிச்சதும், இப்போ நினைச்ச நேரமெல்லாம் புடவை ஷாப்பிங்தான். காட்டன், ஜார்ஜெட், சாஃப்ட் சில்க், ஹேண்ட்லும் வெரைட்டியா பர்சேஸ் பண்ணிக் கட்டுறேன்.

ரியல் லைஃப்ல அக்ஸசரீஸ் போடவே புடிக்காது. ஆனா சீரியலுக்காக சகிச்சுகிட்டு நகைகள் போடுறேன். புடவைக்கு மேட்சா நகை போட்டு, பூ வைத்து, நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி என முழுத் தமிழ்ப் பெண்ணாக கண்ணாடியில் என்னைப் பார்க்கும் போது எனக்கே நான் ரொம்ப அழகாகத் தெரிஞ்சேன். இப்போ தமிழ்ப் பொண்ணுக்கான கெட்அப் தான் என்னுடைய ஃபேவரைட் அவுட்லுக். என்னை இன்னும் அழகாகக் காட்டிக்கொள்ள நிறைய அக்சரிஸ்களை ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் பண்றேன். ஜிமிக்கிகள் மீதான காதல் இன்னும் அதிகமாயிருச்சு. மொத்தத்தில் இப்போ ஷ்ரேயா முழுத் தமிழ்ப்பெண்ணாகவே மாறிட்டேன்" என்கிறார் வெட்கம் ததும்ப.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.