விடுதலை என்பது வீறுகொண்டெழுவது!!


ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு இனமோ ஒடுக்கப்படும் போது, இரண்டு செயற்பாடுகள் நடைபெறுகின்றது.
ஒன்று அது அழிந்துபோகிறது, இன்னொன்று எழுர்ச்சி பெறுகிறது. அந்த தோற்றுவாயில் பிறந்ததுதான் தமிழீழ விடுதலைப் போராட்டமும். .
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்ட ஒன்பது பேரின் சாவு பொன் சிவகுமாரன் அவா்களிடம் ..ஏற்படுத்திய .தாக்கம் அவா் மனதில் விடுதலைவாதபோக்கை உண்டுபண்ணியதையும் 1958  இனக்கலவரத்தில் தமிழா்கள் அநியாயமாக கொல்லப்பட்டதும் அதன் துயரமும் கேட்டு  தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவா் சிறு வயதில் சினம் கொண்டார் எனவும் அறிகின்றோம் அல்லவா, இதே உணா்வுதான் ஐம்பதினாயிரத்தி்ற்கு மேற்பட்ட மாவீரர்களினது உள்ளத்தில் பிரகாசித்ததும்.
பதினாறே வயதில் விடுதலையின் தாகத்தினை நெஞ்சிலே சுமந்தவரின் நெஞ்சிலே எரிந்த தீ அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அடையவேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதே. அடிமைத்தனங்கள் பரிசளிக்கப்படாவிட்டால் உடைத்தெழ வேண்டும் என்னும் எண்ணமும் உருவாகவேண்டியதில்லையே.
அண்மைய காலங்களில் நடைபெறும் சம்பவங்கள் தெள்ளத் தெளிவாக ஒன்றை ஞாபகப்படுத்துகின்றது. அதாவது காலகாலமாக தமிழா்கள் அடிமைப்பட்டவா்களாகவே வாழ்ந்தாகவேண்டியவா்கள் என்னும் உண்மையை.
ஜனநாயகத்தி்ன் புனிதா் என்றெண்ணியே தமிழா்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மைத்திரி பால சிறிசேன அவா்களை வெற்றியடைய வைத்தனா். அவரும் அந்த மாயையை சில காலங்கள் பின்பற்றினாலும் கடைசியில் வெளிப்பார்வைக்கு தான் போட்டிருந்த வேசத்தை கூட்டு அரசியல் பிரவேசத்தின் மூலம் வெளிக்காட்டிக்கொண்டார்.
தமிழா் தாயகத்தை இன ரீதியாகச் சிதைக்கும் ஏற்பாட்டின் வடிவமாகவே வீதிக்கொன்றாய் முளைக்கும் புத்தா் சிலைகளும் தமிழா் நிலங்களைக் கையகப்படுத்தி பௌத்த நிலமாக்குவதும் என உதாரணங்கள் காண்பிக்கப்படுகின்றன.
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இந்த நிலக்கையகப்படுத்தல் அதி தீவிரமாய் காணப்பட்டதெனினும் தற்போதைய நல்லாட்சியிலும் இவ்வினை தொடர்வது தமிழ் மக்களின் மனங்களை கொதிப்படையவே வைத்திருக்கின்றது.  தமிழ் மக்கள் வழிவழியாக வாழும் புனித நிலங்களில் காடுகளை அழித்து புத்தா் சிலைகளை நிறுவுவதுடன் அதனைப் பராமரிப்பதற்கென பௌத்த மதகுருமாரையும் குடில் அமைத்து தங்கவைக்கின்றனா். வேலிக்கு ஓணான் சாட்சி என்பது போல தொல்பொருள் திணைக்களமும் இந்த அநியாயத்திற்கு துணைபோகின்றது.
2000 ஆண்டுகளுக்கு முன்னா் விகாரை இருந்ததாக கூறி நீராவியடிப் பிள்ளையாரை துாக்க முயற்சி நடக்கிறது அரசியல் தந்திரோபாயத்தின் மூலம். பெரும்பான்மைச் சமூகத்தின் அரசியல் கட்டுகளுக்குள் சிக்கி வெளிவரமுடியாமல் கிடக்கிறது எமது அரசியல் சாணக்கியம். எங்களுக்கானவைகள் பறிக்கப்படும்போதும் சகல சந்தா்ப்பங்களிலும் நிராதரவாய் ஆக்கப்படும் போதும் நாம் அடிமைப்படுத்தப்படுகிறோம் என்றுதானே அா்த்தம்.
விடுதலை என்பது வீறுகொண்டெழுவதே.

தமிழரசி
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Hea
dlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #ColomboNo comments

Powered by Blogger.