தரையில் அமர்ந்து ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அஜித் !

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடித்து வெளியான `விஸ்வாசம்' படத்துக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். சினிமா தவிர, அஜித்குமாருக்கு கார், பைக் மீது அதீத காதல் என்று அனைவருக்கும் தெரியும்.

சமீபமாக எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாடிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்‌ஷா என்னும் குழுவை உருவாக்கினர். தக்‌ஷா குழுவின் ஆலோசகராகத் திரைப்பட நடிகர் அஜித்குமாரை பல்கலைக்கழகம் நியமித்தது. இந்த அணி ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ சர்வதேசப் போட்டியில் 2வது இடத்தைப் பிடித்து சாதனையும் படைத்தது. இதுபோக, துப்பாக்கிச் சுடுதலில் அதீத ஆர்வம் கொண்டவர் அஜித். அவர் துப்பாக்கிச் சுடுதலுக்கான பயிற்சிக்கு வந்ததை அறிந்த அவரது ரசிகர்கள் அங்கு கூடினர். அப்போது அவர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் சொல்லும் வீடியோவும் அவர் துப்பாக்கிச் சுடும் போட்டோவும் இணையத்தில் வைரலானது. இதைத் தொடர்ந்து, அதே இடத்துக்கு அஜித் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைக்காண வந்திருந்தனர். இவர் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை முடித்துவிட்டு கிளம்பும்போது ரசிகர்களுக்கு ஆட்டோ கிராஃப் போட்டும், அவர்களுடன் தரையில் உட்கார்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டும் கார் ஏறும் வீடியோ இப்போது செம வைரல்!.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


 

No comments

Powered by Blogger.