பெருந்தோட்ட வீதிகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்கள் விற்பனை!
மலையக பெருந்தோட்ட தேயிலை மலைகளின் வீதிகளை பயன்படுத்தி போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக விசனம் தெரிவித்துள்ள பெருந்தோட்ட கைத்தொழில் துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் இதை தடுப்பதற்கு பெருந்தோட்ட பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக பதுளை மாவட்டத்தில் கிளேன்பீல் தோட்ட பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்த கருத்து தொடர்பில் வினவியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்பட்டு வரக்கூடிய நபர்கள் கடந்த காலங்களில் நகர் பகுதிகளை பிரதான இடங்களாக கொண்டு விற்பனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
இன்று அவ்வாறான போதை பொருட்களை மலையக பிரதேசங்களிலும் விற்பனை செய்து பெருந்தோட்ட சமூகத்தையும் இதற்கு அடிமையாக்கும் செயல்களை முன்னெடுக்கின்றனர்.
குறிப்பாக மலையக பெருந்தோட்டங்களை உள்வாங்கப்பட்ட நகர் பகுதிகளில் ஏதோ ஒரு மூலையில் போதை பொருட்களை விற்பனை செய்து வந்துள்ள நபர்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி தோட்டப்பகுதிகளுக்குள் நுழைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டில் போதை பொருளுக்கு எதிராக ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் அதனை ஒழித்து கட்டும் நடவடிக்கையில் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொள்ளும் நடவடிக்கை விற்பனையாளர்களுக்கு கெடுபிடியை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் இதில் மாட்டிக்கொள்ளாமல் தமது வியாபாரத்தினை முன்னெடுக்க தற்போது பெருந்தோட்டங்களின் பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
பெருந்தோட்ட வீதிகளின் சந்திகள், மேட்டு பகுதிகளில் விற்பனைகளில் ஈடுப்படும் நபர்கள் தப்பிக்க கூடிய வகையில் முச்சக்கரவண்டிகள் மற்றும் மறைவிடங்களை பயன்படுத்துவதாகவும் எமது கவனத்திற்கு மக்கள் கொண்டு வந்துள்ளனர்.
அதேவேளையில், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்கள் வரக்கூடியதை அவதானிக்க கூடிய இடங்களை தெரிவு செய்தே இவைகள் விற்பனை செய்யப்படுவது இப்போது கண்டறியப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் கடந்த காலத்தில் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராணியப்பு தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையும் ஞாபகப்படுத்தினார்.
எனவே மலையக சமூகம் இன்று அவர்களின் வாழ்க்கை நிலையில் படிப்படியாக முன்னேரும் தகுதிகளை பெற்றுவருகின்றனர்.
தமது பிள்ளைகளை பாடசாலைக்கு முறையாக அனுப்பி கல்வியறிவை வளர்கும் நடவடிக்கைகளில் மிகுந்த அக்கறைக்காட்டியும் வருகின்றனர்.
எனினும் நமது பெருந்தோட்டப்பகுதிகளில் இவ்வாறாக போதை பொருள் பாவனை மற்றும் விற்பணைகளில் ஈடுபடுவோர்களிடமிருந்து நமது பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும்.
இது தொடர்பில் அவதானத்துடனும், நமது பிள்ளைகளின் அசைவுகளிலும் அவதானம் செலுத்த வேண்டும். அத்துடன் தோட்டங்களுக்கு உள்வாங்கும் வீதிகளின் சந்திகளில் சந்தேகத்திற்கு இடமாக நபர்கள், மற்றும் முச்சரக்கர வண்டிகள் என காணப்படும் பட்சத்தில் அது தொடர்பில் பாதுகாப்பு பிரிவினரின் கவனங்களுக்கும் கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை