பெண்களுக்கு எதிராக வன்முறை -காதலர் தினத்தில் நடைபயணம்!(படங்கள்)

எழுநூறு கோடி மக்களில் அரை சதவீதத்திற்கு மேல் பெண்கள். உலக சுகாதார அமையத்தின் கருத்து கணிப்பின் படி, மூன்றில் ஒரு பெண் ஏதாவது ஒரு வகையில் வன்முறைக்குட்படுத்தப்படுகிறார்கள் . நூறு கோடி பெண்களுக்கு மேற்பட்டவர்கள் வன்முறைக்குட்படுகிறார்கள் என்பதே அதன் பொருள். அவர்களுக்காக நூறுகோடி மக்கள் எழ வேண்டும் என்பதே இன்றைய நாளின் நோக்கம்.
உலகளாவிய ரீதியிலும் நாடளாவிய ரீதியிலும் பல செயற்பாட்டாளர்கள் இவ்வாறான பேரணிகளை கலந்துரையாடல்களையும் நடாத்தியுள்ளனர்.
நாமும் பெண்கள் விடுதலைக்காக இன்று எமது குரல்களை கொடுத்துள்ளோம். இனிவரும் காலங்களில் தாங்களும் இவ்வாறான செயல்வாதங்களினை முன்னெடுக்குமாறு வல்லமையான சமூக மாற்றத்திற்கான இயக்கத்திலிருந்து கேட்டுக்கொள்கிறோம்.
One Billion Rising
#OBR #OBRSL #lkr #VDay
கருத்துகள் இல்லை